14 வயதில் திருமணம்; 20 வயதில் எய்ட்ஸ்’ விதவையான இளம்பபெண்; கையில் குழந்தையுடன் போராடுகிறார்

Read Time:2 Minute, 16 Second

பெங்களூரைச் சேர்ந்தவர் நாகலெட்சுமி. இவரது தந்தை மருத்துவமனை ஒன்றில் பணி புரியும் சாதாரண தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நாகலட்சுமியை சீக்கிரமே திருமணம் செய்து கொடுத்து தனது குடும்ப பாரத்தை கீழே இறக்கி வைக்க நினைத்தார் தந்தை. அவரது எண்ணப்படியே மாப்பிள்ளையும் கிடைத்தார். நாகலட்சுமியின் முறை மாமனான தேவராஜ் ஒரு லாரி டிரைவர். ஓடி, ஆடி சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தக 14 வயது நாகலட்சுமிக்கு தேவராஜடன் திருமணம் ஆகியது. லாரி டிரைவரான தேவ ராஜக்கு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது பொழுது போக்கு. விளைவு அவரை எய்ட்ஸ் தாக்கியிருந்தது. ஆனால் அதனை மிகச் சுலப மாக குணமாக்கி விடலாம் என்று கருதியிருந்தார் அவர். இந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து நாகலட்சுமி தனது 17-வது வயதில் அழகான குழந்தையை பெற்றெடுத்தாள். மகிழ்ச்சியான இந்த தருணத்தில் விதி சதி செய்தது. ஒரு நாள் தேவராஜ் `திடும்’ என படுத்த படுக்கையில் விழுந்து விட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். சில நாட்களிலேயே மரண மடைந்து விட்டார் அவர். இப்போது நாகலட்சுமிக்கு வயது 24. முற்றிலுமாக கணவ ரால் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நோயாளி. அவர் மட்டுமல்ல அவரது குழந்தையும் தான். ஆண்களே! என் சோகக் கதையை கேளுங்கள். வேண்டாம் தேவையற்ற பெண் தொடர்பு என அவர் தனது வாழ்க்கை போராட்டத்துடன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருச்சியில் பிரபாகரன் கொடும்பாவியை எரித்த காங்கிரஸார்
Next post இந்தியா வந்தார் ஏசு? தயாராகிறது சினிமா