ஒரே ஆண்டில் சவுதி அரேபியாவில் 203 இந்தியர் தற்கொலை

Read Time:1 Minute, 23 Second

saudi_ac.gifசவுதி அரேபியா நாட் டுக்கு வேலை தேடி செல்லும் வெளிநாட்டினர் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. அதில் இந்தியர்கள் எண்ணிக்கை தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டுமே 203 இந்தியர்கள் தற்கொலை செய் துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் வங்காள தேசத்தினர் உள்ள னர். அவர்கள் 155 பேர் தற் கொலை செய்துள்ளனர். இதே போல பாகிஸ்தானியர் 141 பேரும், ஓமன் நாட்டை சேர்ந்த 102 பேரும், எகிப்தை சேர்ந்த 97 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்வர்களில் 30 முதல் 39 வயது உள்ளவர்களின் விகிதம் 44.3 சதவீதமும், 20 முதல் 29 வயது உள்ளவர்களின் விகிதம் 33.6 சதவீதமும் உள்ளது.தற்கொலை செய்பவர்களில் 63 சதவீதம் பேர் தூக்கு போட்டு கொள்கிறார்கள். 12 சதவீதம் பேர் உயரமான இடங்களில் இருந்து குதிக்கின்றனர். சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு 295 வெளிநாட்டினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஓரின சேர்க்கை தம்பதிக்கு வாடகை தாய்மூலம் இரட்டை குழந்தை
Next post புட்டப்பர்த்தியில் தீவிரவாதி கைது: சாய்பாபா ஆசிரமத்தை தகர்க்க சதியா?