காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைக்கு 98 பேர் பலி…!!

Read Time:3 Minute, 19 Second

3113c341-8ce3-48f5-a2d0-6cf02ed8d656_S_secvpfகாஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி கஸ்தூரி (40), இவர் பெரும்பாக்கம் பகுதியில் ஆற்றுநீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது தண்ணீரில் தவறி விழுந்தார்.

இதனை கண்ட தாமல் காலனியைச் சேர்ந்த தீனதாயளன் (23) அவரது நண்பர் ராசுக்குட்டி (23) ஆகியோர் கஸ்தூரியை காப்பாற்ற நீரில் பாய்ந்தனர். ஆனால் அவர்களையும் தண்ணீர் அடித்துச் சென்றது.

இதில் ராசுக்குட்டி கரையோரம் ஒதுங்கி உயிர் தப்பினார். கஸ்தூரியையும் தீன்தாயாளனையும் ஆற்று நீர் அடித்து சென்றது. இந்த நிலையில் தீனதயாளன் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர், கஸ்தூரியை தேடும் பணி நடந்து வருகிறது. அவர் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக இதுவரை 98 பேர் பலியாகியுள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 24 பேர் இறந்து உள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைளில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 237 முகாம்களில் 55 ஆயிரத்து 514 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது,

மீட்பு நடவடிக்கைகளுக்காக 18 ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 கம்பெனியைச் சேர்ந்து 160 ராணுவ வீரர்கள். 80 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில அரசினைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினைச் சேர்ந்த 200 பேருடன் காவல் துறை, தீயணைப்பு மீட்புப் பணித் துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பணியில் 6 ஹெலிகாப்படர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

உத்திரமேரூரில் நேற்று முன்தினம் 189 மி.மீ அளவு மழை பெய்தது. இந்த பலத்த மழையால் காஞ்சிபுரம்–உத்திரமேரூர் சாலையில் உள்ள வெங்கச்சேரி செய்யாற்றுப் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்தடையால் சுவாச கருவி செயல்படவில்லை: தனியார் ஆஸ்பத்திரியில் 18 நோயாளிகள் சாவு…!!
Next post மெல்ல மெல்ல இயல்புக்கு வரும் சென்னை…!!