இலங்கையில் 191 பேரை பலி கொண்ட விமான விபத்து : இன்றுடன் 41 வருடங்கள் பூர்த்தி…!!

Read Time:3 Minute, 57 Second

1358902-(1)இலங்­கையில் இடம்­பெற்ற பாரிய விமான விபத்து சம்­ப­வமொன்று நடந்து இன்­றுடன் சரி­யாக 41 வரு­டங்கள் பூர்த்தியா­கின்­றன.

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்­தோ­னே­ஷியா சுரா­ப­யா­வி­லி­ருந்து 182 ஹஜ் பய­ணிகள் மற்றும் 9 ஊழி­யர்கள் சகிதம் மக்கா நோக்கி பய­ணித்த மார்டின் எயார் பிளைட் 138 பய­ணிகள் “சப்த கன்­னிய” என அறி­யப்­படும் ஏழு­கன்­னியர் மலையில் ஐந்­தா­வது குன்றின் மீது மோதிச் சித­றி­யது. இச்­சம்­ப­வத்தில் விமா­னிகள் உட்­பட 191 பேரும் அதே இடத்தில் பலி­யா­கினர்.

இலங்­கையில் அது­வ­ரை­யி­லான மிக மோச­மான விபத்­தாக இச்­சம்­பவம் அமைந்­தது. மலை­ய­கத்­திற்கு இது அதிர்ச்­சி­ய­ளித்த ஒரு புது அனு­பவம். 191 பேர் பலி­யான இவ்­வி­பத்து இடம்­பெற்ற மலைப்­ப­கு­தியை ஏழு கன்­னியர் மலை (ஆங்­கி­லத்தில் வில்கின் ஹில்ஸ்) என்று அழைக்­கின்­றனர்.

இவ்­வி­பத்தில் பலி­யான 190 பேர் தெப்­பட்டன் தோட்ட கொத்­த­லென பகு­தியில் அவ்­வி­டத்­தி­லேயே புதைக்­கப்­பட்­டனர்.

அடை­யாளம் காணக்­கூ­டி­ய­வாறு இருந்த விமானப் பணிப்பெண் ஒரு­வரின் உடலை அவரின் காதலர் ஹெலி­கொப்டர் மூல­மாக கொண்டு சென்ற நெகிழ்ச்­சி­யான சம்­ப­வமும் இதில் அடங்கும்.

விபத்­துக்­குள்­ளான மெக்­டொனல்ட் டக்ளஸ் டி.சி. 8 ரக விமா­னத்தின் பாகங்­களில் எஞ்­சி­யி­ருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இது­வரை பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஒரு டயர், நோட்டன் பொலிஸ் நிலை­யத்தில் உள்­ளது. நல்­ல­நி­லை­யி­லி­ருக்கும் டயர் நோட்டன் விம­ல­சு­ரேந்­தி­தர அணைக்­கட்­டுக்கு செல்லும் வழியில் சம்­ப­வங்களை சுருக்­க­மாக தாங்கி, பார்­வைக்­காக காட்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

விபத்து நடைபெற்ற இடத்தில் வெளி­நாட்டு நாண­யத் தாள்கள் உட்­பட பல பொருட்­களை அப்­பி­ர­தேச மக்கள் பாது­காத்து வரு­கின்­றனர்.

உயி­ரி­ழந்­த­வர்கள் புதைக்­கப்­பட்ட இடத்தில் நினை­வுத்தூண் ஒன்றும் அமைந்­துள்­ளது. ஆனால் இன்று அப்­ப­குதி காடாக காட்­சி­யளிக்­கின்­றது.

இறந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த ஒவ்­வொரு வரு­டமும் டிசம்பர் 4ஆம் திகதி இந்­தோ­னே­சி­யா­வி­லி­ருந்து உற­வி­னர்கள் இவ்­வி­டத்­திற்கு வந்து செல்­வது வழக்­க­மாகும்.

விமா­னத்தின் கறுப்­புப்­பெட்டி தக­வலின்படி தொழில்­நுட்ப கோளாறு கார­ண­மா­கவே இவ்­வி­மானம் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்­வி­மா­னத்தை செலுத்­திய விமானி 8 தட­வைகள் இலங்கை ஊடாக மக்­கா­விற்கு விமா­னத்தை செலுத்­திய அனுபவம் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

இவ்விபத்து சம்பவம் நடந்த இடத்தில் வசித்தவர்கள், இன்னமும் அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு இச்சம்பவத்தை எடுத்துக்கூறுபவர்களாக உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை அணிந்த கவர்ச்சி ஆடை! (VIDEO)…!!
Next post உங்களுக்கு தினமும் சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கிறதா? இனிமேல் வேண்டாம்…!!