லண்டன் ரயிலில் பய­ணித்த பெண்­ணுக்கு “பரு­ம­னா­ன­வர்­களை வெறுக்கும் நபர்­களின்” அட்டை; பிரித்­தா­னிய பொலி­ஸாரின் விசா­ரணை ஆரம்பம்…!!

Read Time:2 Minute, 5 Second

13571Kara-Florishலண்­டனில் ரயில் ஒன்றில் பயணம் செய்த பெண்­ணுக்கு ஒரு குழு­வினர் “கொழுத்த, அசிங்­க­மான மனிதர்” என எழு­தப்­பட்ட அட்­டை­யொன்றை வழங்­கி­யமை தொடர்­பாக பிரித்­தா­னிய பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

காரா புளோரிஷ் எனும் பெண், லண்­டனின் சுரங்க ரயி­லொன்றில் பயணம் செய்­த­போது ஒரு குழு­வினர் அவ­ருக்கு மேற்­படி அட்டையை கொடுத்­தி­ருந்­தனர்.

இக்­கு­ழு­வினர் தம்மை ஓவர்வெய்ட் ஹேட்டர்ஸ் லிமிடெட் என அழைத்­துக்­கொள்­கின்­றனர்.

அந்த அட்­டையில் ஒரு பகு­தியில் “ஃபெட் (கொழுத்­தவர்) என எழுதப்­பட்­டி­ருந்­தது.

“எமது அமைப்பு கொழுத்த மனி­தர்­களை வெறுக்­கி­றது. அரை­வாசி உலகம் பட்­டி­னியால் கிடக்­கும்­போது நீங்கள் அதி­க­மான உணவை உட்­கொள்­வதை நாம் ஆட்­சே­பிக்­கிறோம்” என அந்த அட்­டையின் மறு­பு­றத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

சுகா­தா­ரத்­துறை ஊழி­ய­ரான காரா புளோரிஷ் இந்த அட்­டையை சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்­டி­ருந்தார்.

பிரித்­தா­னி­யர்­களின் சரா­சரி எடை­யுடன் ஒப்­பி­டும்­போது காரா புளோரிஷ் அதிக எடை கொண்­டவர் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

தமது தன்­னம்­பிக்கை தொடர்பில் தடு­மாறும் மக்­க­ளுக்கு இந்த அட்டை பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது என அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்நிலையில், இந்த குழுவினர் தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமாகும்வரை பாலியல் உறவில் ஈடுபட காதலர் மறுத்ததால் காதலரை கைவிட்ட முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி…!!
Next post தொடர் மழையால் தீவாக மாறிய கடலூர் நகரம்..!!