திருமணமாகும்வரை பாலியல் உறவில் ஈடுபட காதலர் மறுத்ததால் காதலரை கைவிட்ட முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி…!!

Read Time:5 Minute, 6 Second

13571Untitled-10முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச) அழகுராணியான ஒலிவியா கல்போ தனது காதலர் டிம் டெபோவை கைவிட்டமைக்கு, திருமண மாகும்வரை பாலியல் உறவில் ஈடுபடக்கூடாதென்ற காதலரின் கொள்கையே காரணம் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

23 வயதான ஒலிவியா கல்போ அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

2012 அமெரிக்காவின் மிஸ் யூனிவர்ஸ் யூ.எஸ்.ஏ. அழகுராணியாக தெரிவான அவர், அதே வருடம் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டிகளிலும் முதலிடம் பெற்று 2012 மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக முடிசூட்டப்பட்டவர்.

இவர் அண்மைக்காலமாக அமெரிக்கப் பாணி கால்பந்தாட்ட வீரரான டிம் டெபோவை காதலித்து வந்தார் எனவும் தற்போது இவர்களின் காதல் முறிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

திருமணமாகும்வரை பாலியல் உறவில் ஈடுபடக்கூடாது என டிம் டெபோ கருதுவதே அவருடனான காதலை ஒலிவியா கல்போ முறித்துக் கொண்டமைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

டிம் டெபோவ் 1987 இல் பிலிப்பைன்ஸில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் திறமைக்காக மாத்திரமல்லாமல், தனது ஆன்மிக நம்பிக்கைகள் மூலமும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த டிம் டெபோவின் பெற்றோர் 1985 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸுக்கு குடிபெயர்ந்து மத அமைப்புகளில் சேவையாற்றியவர்கள்.

டிம் டொபோவின் தாயாரான பமேலாவுக்கு கடும் சுகவீனம் ஏற்பட்டபின் குணமடைய தொடங்கியபோதே அவருக்கு தான் கர்ப்பமடைந்திருந்தமை தெரியவந்தது.

நோய்க்காக அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகளின் தாக்கத்தினால் அவரின் வயிற்றிலிருந்த சிசுவுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தனவாம்.

அதனால் கருக்கலைப்பு செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

எனினும் பமேலாவும் அவரின் கணவர் ரம்ஸி டெபோவும் கருக்கலைப்புக்கு மறுத்தனர்.

(பிலிப்பைன்ஸில் கருக்கலைப்பு சட்டவிரோதமானது). தனது வயிற்றில் வளரும் குழந்தையை பெற்றெடுக்கப் போவதாக பமேலா தெரிவித்தார். அந்த குழந்தைதான் டிம் டெபோவ்.

டிம் டெபோவும் தனது பெற்றோரைப் போலவே ஆன்மிக ஈடுபாடு கொண்டவராக விளங்குகிறார்.

பிலிப்பைன்ஸிலும் அவர் பாடசாலைகள் மற்றும் கிராமங்களில் சமய போதனைகளில் ஈடுபட்டதுடன் மக்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று புளோரிடா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணிக்காக விளையாடிய வேளையிலும் அவர் தனது சமய பிரசாரங்களைத் தொடர்ந்தார்.

தனது சமய நம்பிக்கைகள் காரணமாக, திருமணம் செய்யும் வரை பாலியல் உறவில் ஈடுபடப்போவதில்லை என டிம் டெபோ தெரிவித்துள்ளார்.

ஆனால், இதை அவரின் முன்னாள் பிரபஞ்ச அழகுராணி காதலியான ஒலிவியா கல்போவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம்.

இதுவே அவர்களின் பிரிவுக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டிம் டெபோவை காதலிப்பதற்கு முன், அமெரிக்காவின் இளம் பாடகரும் நடிகருமான நிக் ஜொனாஸை இவர் காதலித்து வந்தார்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் யூ.எஸ்.ஏ. அழகுராணி போட்டிகளில் நடப்பு அழகுராணியாக ஒலிவியா கல்போ கலந்துகொண்டார்.

அப்போட்டிகளின்போதே அவர் ஒலிவியா கல்போவை முதன்முதலில் சந்தித்தாராம்.

2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் தானும் ஒலிவியா கல்போவும் பிரிந்துவிட்டதாக கடந்த ஜூன் மாதம் நிக் ஜொனாஸ் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார்..!!
Next post லண்டன் ரயிலில் பய­ணித்த பெண்­ணுக்கு “பரு­ம­னா­ன­வர்­களை வெறுக்கும் நபர்­களின்” அட்டை; பிரித்­தா­னிய பொலி­ஸாரின் விசா­ரணை ஆரம்பம்…!!