தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்கிறது…!!

Read Time:1 Minute, 53 Second

f9c58649-426a-42db-95cf-351f28de2285_S_secvpfவங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முழுவதும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலும் மழை நிற்கவில்லை.

சென்னையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை தொடர்ந்து 30 மணி நேரம் மழை பெய்ததால் சென்னை சைதாப்பேட்டை, நந்தனம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, அண்ணாநகர், முகப்பேர், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, ஊரப் பாக்கம், வண்டலூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்பட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தாம்பரத்தில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் அங்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

நுங்கம்பாக்கத்தில் 30 சென்டி மீட்டர் மழையும், விமான நிலையத்தில் 35 செ.மீ. மனையும் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் எங்கும் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து செல்வதால் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் இதனால் சென்னையில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் 134 குழந்தைகளை பலிவாங்கிய ராணுவப் பள்ளி துப்பாக்கிச்சூடு: 4 தலிபான் தீவிரவாதிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர்…!!
Next post கரூர் அருகே கழிப்பறை தொட்டிக்குள் விழுந்து 2 தொழிலாளர்கள் பலி…!!