ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கலவரம்: செஸ் சாம்பியன் காஸ்பரோவ் உள்பட 300 பேர் கைது

Read Time:2 Minute, 7 Second

ரஷியாவில் டிசம்பர் 2-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது என்று புகார் கூறியும் அதிபர் புதினை கண்டித்தும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார் கள். புதின் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் அவர் கள் புகார் கூறி வருகிறார் கள். எதிர்க்கட்சியினரின் கல வரம் மாஸ்கோ உள்பட பல்வேறு நகரங்களில் பரவி வருகிறது. பீட்டர்ஸ் பர்க் நகரில் எதிர்க்கட்சியினர் 3000 -க்கும் மேற்பட்டவர்கள் பேரணி நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. பேரணியில் வந்த 300 -க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் செஸ் சாம்பியன் காரி காஸ்பரோவும் கைது செய்யப் பட்டார். இவர் `அதர் ரஷியா’ என்ற கட்சியை நடத்தி வருகிறார். மார்ச் மாதம் ரஷியாவில் அதிபர் தேர்தலும் நடக்க இருக்கிறது. இந்த தேர்த லில் அதிபர் பதவிக்கு போட்டி யிடும் வேட்பாளர் போரிஸ் நெம்ட்சோவும் கைதானவர்களில் முக்கிய மானவர். கைதான காரி காஸ்பரோவ் 5 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் எதிர்க் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் ஓட்டல் அறையில் மர்மமாக சுடப்பட்டார். குண்டு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். இவரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்து இருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தியா வந்தார் ஏசு? தயாராகிறது சினிமா
Next post புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையமே கிளிநொச்சியில் அழிப்பு’