முன்னாள் மனநோய் வைத்தியசாலையில் மூளையை திருடி இணையத்தில் விற்பனை செய்த இளைஞன்…!!

Read Time:2 Minute, 18 Second

1351114அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் நூதனசாலை ஒன்றிலிருந்து மனித மூளைகளை திருடி ஈபே இணையத்தளத்தில் விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.

23 வயதான டேவிட் சார்ள்ஸ் எனும் இந்த இளைஞன் இண்டியானா மாநிலத்திலுள்ள மருத்துவ வரலாற்று நூதனசாலையொன்றுக்குள் புகுந்து, பதனிடப்பட்ட மனித மூளைகள் உட்பட பல பொருட்களை திருடிச்சென்றதாகவும் பின்னர் இப்பொருட்களை ஈபே இணையத்தளத்தில் விற்பனை செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தான்.

இந்த நூதனசாலை முன்னர், மனநோயாளிகளுக்கான மத்திய இண்டியானா வைத்தியசாலையாக இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

டேவிட் சார்ள்ஸிடமிருந்து மனித மூளை அடங்கிய 5 சாடிகளை வாங்கிய நபர் ஒருவர், அவை இண்டியானா மாநில நூதனைசாலைக்கு சொந்தமானவை என்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருந்தார். அதையடுத்து, 2013 டிசம்பர் மாதம் டேவிட் சார்ள்ஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவனிடமிருந்து மனித இழையங்கள் அடங்கிய 80 சாடிகளையும் அமெரிக்க பொலிஸார் கைப்பற்றினர்.

இது தொடர்பான விசாரணையின்போது தன்மீதான குற்றச்சாட்டுகளை டேவிட் சார்ள்ஸ் ஒப்புக்கொண்டான்.

அதையடுத்து, இந்த இளைஞனுக்கு நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்ததுடன், நூதனசாலைகளுக்கு அருகில் செல்வதற்கும் தடை விதித்தது.

அத்துடன், உயர்பாடசாலை டிப்ளோமா அல்லது பொதுக்கல்வி அபிவிருத்தி சான்றிதழ் கற்கை நெறியொன்றை பயில வேண்டும் எனவும் நீதின்றம் உத்தரவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரஸ்பரம் மற்றவரின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் நண்பிகள்…!!
Next post நாய்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு சிறுமிகளைத் தூண்டிய நபருக்கு சிறைத்தண்டனை…!!