போர்விமானம் சுடப்பட்ட விவகாரம்: ரஷியா மிரட்டலுக்கு துருக்கி அதிபர் வருத்தம் தெரிவித்தார்…!!

Read Time:4 Minute, 14 Second

3e2dcaf0-c7e7-47e3-935c-7f28d2de7a05_S_secvpf (1)போர் விமானம் சுடப்பட்ட விவகாரத்தில் ரஷியா மிரட்டலுக்கு துருக்கி பணிந்தது.

சிரியா எல்லையில் பறந்த ரஷிய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. தனது வான் எல்லையில் அத்துமீறி பறந்ததால் சுட்டதாகவும் தெரிவித்தது.

துருக்கியின் இச்செயல் ரஷியாவுக்கு கடும் ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. ‘நோட்டோ’ நாடுகளின் தலைமை பதவி வகிக்கும் அமெரிக்காவின் தூண்டுதலால் விமானம் சுடப்பட்டதாக ரஷியா கருதுகிறது.

இச்சம்பவத்தை சகித்துக் கொள்ள முடியாது என துருக்கிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர்புதின் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

எனவே, இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் ஆபத்து ஏற்பட்டது. இருந்தும் துருக்கி அதிபர் ஏர்டோகன் ‘ரஷியா நெருப்புடன் விளையாட வேண்டும்’ என துணிச்சலுடன் பதிலுக்கு எச்சரித்தார். மேலும் பிரச்சினை ஓயும் வரை துருக்கி மக்கள் ரஷியாவுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

ஏனெனில் துருக்கி  –  ரஷியா இடையே ‘விசா’ இன்றி பயணம் செய்ய முடியும். எனவே அந்த வசதியை நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் ரஷியாவோ துருக்கி மீது போர் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என அறிவித்தது. மேலும் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு துருக்கி மன்னிப்பு கேட்கவில்லை என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.

மேலும், துருக்கி மீது பொருளாதார தடையை விதித்தது. சுற்றுலா, விவசாயம் மற்றும் எரிசக்தி திட்டங்களுக்கு தடை விதித்தது. துருக்கி கம்பெனிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது நிறுத்தப்பட்டது.

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் கடுமையான சோதனை நடத்தப்படுகிறது. துருக்கியை பழிவாங்கும் நடவடிக்கையாக குழாய் மூலம் எரிவாயு மற்றும் அணு மின்சார ஒப்பந்தம் ஆகிய பெரிய திட்டங்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் செய்தார்.

மேலும் உக்ரைனில் இருந்து பிரிந்து சமீபத்தில் ரஷியாவுடன் இணைந்த கிரீமியாவில் துருக்கி அதிபர் எர்டோசனின் உருவப் பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகளால் வீரமாக பேசிய துருக்கி பணிந்தது.

மேலும் ரஷிய போர் விமானம் சுடப்பட்ட சம்பவத்துக்கு துருக்கி அதிபர் எர்டோகன் வருத்தம் தெரிவித்துள்ளார். பாலி கெசிர் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.

ரஷிய போர் விமானம் சுடப்பட்டது வருத்தம் அளிக்கிறது. அதற்காக உண்மையிலேயே வருந்துகிறோம். துரதிர்ஷ்ட வசமாக இது நடந்து விட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது’’ என்றார். இதன் மூலம் துருக்கி – ரஷியா இடையே இருந்து வரும் பதட்டம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெஃபர்டிட்டியின் மம்மி..!!
Next post எகிப்தில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் பலி..!!