மோத் மேன் (Moth man): யார் இந்த பூச்சி மனிதன்?

Read Time:5 Minute, 39 Second

mothman_001அமெரிக்காவின் விர்ஜீனியாவில் மோத் மேன் (Moth man) எனப்படும் பூச்சி மனிதனை மக்கள் பலர் பார்த்துள்ளனர்.
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி, உள்ளூர் கல்லறை ஒன்றில் 5 நபர்கள் சடலம் ஒன்றை புதைப்பதற்காக கல்லறை ஒன்றை தயார் செய்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அருகில் இருந்த மரங்களில் இருந்து மனித உருவம் போன்ற பறக்கும் வினோத உயிரினம் ஒன்று அவர்களின் தலை அருகே கடந்து சென்றுள்ளது.

இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அது பார்ப்பதற்கு பறவை போல் இருந்தாலும் மனிதனை போல் பெரிதாகவும் இருந்ததால் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதிகளில் பல இடங்களில் அந்த உயிரினத்தை பார்த்ததாக பலரும் தெரிவித்துள்ளனர். மேலும், அது பார்ப்பதற்கு மோத் எனப்படும் பூச்சி போல் இருந்ததால் அதற்கு ‘மோத் மேன்’ என பெயரிட்டுள்ளனர்.

இந்த மோத் மேன் பற்றி அதிகார்வப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை. ஆனாலும், அதுபற்றிய எண்ணற்ற கதைகள் மக்கள் மனதில் உள்ளன.

பின்னர் 1966ம் ஆண்டில் நவம்பர் 15ம் திகதி அன்று, பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அந்த மோத் மேனால் தாங்கள் அச்சுறுத்தப்பட்டதாக பொலிசாரிடம் பலரும் புகார் அளித்துள்ளனர்.

எனவே, மோத் மேன் என்றழைக்கப்பட்ட அந்த பூச்சி மனிதன் ஒன்றுக்கும் மேல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழத்தொடங்கியுள்ளது.

பெரிய கண்கள், மனிதன் போன்ற உடல், நீண்ட இறக்கைகள் என பலராலும் விவரிக்கப்பட்ட அந்த பூச்சி மனிதனை பலரும் பார்த்ததாக கூறத்தொடங்கினர்.

இந்நிலையில், 1966ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி இது தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், அந்த பூச்சி மனிதனை நேரில் பார்த்த தம்பதியினர் தங்கள் அனுபவத்தை கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்த விடயம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஆனால் அது தொடர்பான எந்தவித மர்மமும் துளியும் விலகவில்லை.

அந்த மாகாணத்தில் இருந்த TNT என்ற தடைசெய்யப்பட்ட வெடிமருந்து தயாரிக்கும் ஆலை அருகே தான் அதனை அடிக்கடி காண முடிந்ததாக கூறியுள்ளனர்.

2ம் உலகப்போரின் போது செயல்பட்டு அந்த ஆலை தடைசெய்யப்பட்டதால், அதன் அருகே மனிதர்களின் நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.

அந்த பகுதியில் வசிப்பவர்களும் மிக மிக குறைவு என்பதால் இந்த பூச்சி மனிதன் பற்றி கூறுவது உண்மையா இல்லை வெறும் கட்டுக்கதையா என்பதையும் கண்டறிய யாரும் முயலவில்லை.

மேலும் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக பல விசித்திர சம்பவங்கள் நடந்ததாக அங்குள்ளவர்கள் கூறி வந்ததால், ஆராய்ச்சியாளர்கள் அது வேற்றுக்கிரகவாசியாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர்.

ஜான் கீல் என்ற எழுத்தாளர், மோத் மேன் பற்றிய கதைகளை தொகுத்து புத்தமாக எழுத தொடங்கியுள்ளார்.

மேலும், மோத் மேனை நேரில் பார்த்ததாக கூறிய சுமார் 100 நபர்களை சந்தித்து அவர்கள் அனுபவத்தையும், மோத் மேன் பற்றிய அடையாளங்களையும் கேட்டறிந்துள்ளார்.

மேலும், கீல் அந்த பகுதிகளில் நடந்த சிறு சிறு வினோத நிகழ்வுகளையும் சேகரித்து அதற்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்புள்ளதா என ஆராய்ந்துள்ளார்.

பின்னர் ஒரு நாள் 1967ம் ஆண்டு, ஓஹியோவை இணைக்கும் 700 அடி பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கும் மோத் மேன் தான் காரணமா என்ற சந்தேகம் அந்த மக்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் எந்தவித ஆதாரமும் மோத் மேன் பற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்த்க்கது.

இந்த சம்பவத்துக்கு பிறகு மோத் மேன் தோன்றுவது குறைந்துவிட்டதால் இது தொடர்பான பேச்சும் மக்கள் மனதில் இருந்து விலகியுள்ளது.

மக்கள் பார்த்ததாக கூறும் மோத் மேன் உண்மையில் வேற்றுக்கிரக வாசியா? இல்லை வெறும் கட்டுக்கதையா? என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தூர்: மகன் இறந்த அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மரணம்…!!
Next post காதலியை கொலை செய்து சூட்கேசில் மறைத்த காதலன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!