விளையாட்டாகி விட்டது மது, போதை, செக்ஸ், கர்ப்பம் விபரீத மொபைல் கேம்: பெற்றோர் பீதி

Read Time:3 Minute, 48 Second

ஓகே! ஆரம்பிக்கலாமா? முதல்ல மது குடிங்க, அத்தோடு சிகரெட்டையும் பற்ற வையுங்க.
* அடுத்தது, போதைப்பொருள் முயற்சி பண்ணுங்களேன், அது தான் சரியான வழி…
* அட, நீங்க பெரிய ஆளு தான், இப்போ செக்ஸ் விளையாட்டுல இறங்குங்க.
* கடைசி கட்டத்துக்கு வந்துட்டீங்க, பைனலில் சாதிக்க கர்ப்பமாகவும் தயங்காதீங்க!
என்னாங்க இது, இவ்வளவு விபரீதமா ஏதோ சொல்றீங்க ன்னு நினைக்காதீங்க! மொபைல் போனில் “கேம்’ விளையாடியிருக்கீங்களா? ஆஸ்திரேலியாவில், பள்ளி மாணவ, மாணவிகளிடம் பிரபலமாக பரவி வரும், மொபைல், “கேம்’ தான் இது! இதன் பெயர்,”கூலஸ்ட் கேர்ள் இன் ஸ்கூல்!’ இந்த மொபைல் “கேம்’ விளையாட வேண்டுமானால், ஆரம்பக்கட்டத்தில், அதிகமான பொய்களை அள்ளி விட வேண்டும். “கேமில்’ கேட்கப்படும் கேள்விகளுக்கு உலகமகா புளுகாக நீங்கள் பதில் சொல்ல வேண்டும். பள்ளிக்கு போகாமல் “பங்க்’ அடிப்பது, சக மாணவனுடன் சினிமாவுக்கு போவது, டேட்டிங் போவது என்பது போன்ற விஷயங்களை வைத்து கேள்விகள் கேட்கப்படும். பள்ளியில் படிப்பு தொடர்பான கேள்விகளுக்கு தொடர்ந்து பொய்களை அள்ளி வீச வேண்டும். மிக அதிகபட்ச பொய்களை மொபைல் “கேமில்’ குறிப்பிட்டால் தான் அதிக பாயின்ட் கிடைக்கும். இப்படியே போய் கர்ப்பம் வரை இந்த “மொபைல் கேம்’ விளையாட்டு போகிறது. இந்த விளையாட்டை, பெரும்பாலான ஆஸ்திரேலிய மொபைல் நிறுவனங்கள், தங்கள் மொபைல் இணைப்பில் சேர்த்துள்ளன.

இந்த “மொபைல் கேம்’ மாணவர்களுக்கு தவறான வழியை காட்டுகிறது என்று பெற்றோர்கள் பீதியடைந்தாலும், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தீவிரமாக விளையாடுகின்றனர். இந்த “மொபைல் கேம் விளையாடக்கூடாது’ என்று, தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதை நிறுத்தி விட்டனர் பல பெற்றோர்கள்.

இந்த “மொபைல் கேம்’ வடிவமைத்தவர் ஹோலி ஓவன். அவர் கூறுகையில், “கார் ரேஸ், கிரிக்கெட் பந்தயம் போல, இதுவும் ஒரு வகை விளையாட்டு தான். இதில் எந்த விபரீதமும் ஏற்படாது. கெட்ட நடத்தைகளை ஊக்கப்படுத்துவதற்காக இந்த விளையாட்டை வடிவமைக்கவில்லை. இவற்றில் இருந்து மீள வேண்டும் என்பதை சொல்லவே “மொபைல் கேம்’ உருவாக்கினோம்’ என்றார்.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “மொபைல் கேம் விளையாட்டு இப்போது விபரீதமாகி வருகிறது. இதனால், நல்ல நடத்தை ஏற்படுவதற்கு பதில், தவறான பாதையில் பல பள்ளி மாணவர், மாணவிகள் செல்கின்றனர் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post திருச்சியில் பிரபாகரன் கொடும்பாவியை எரித்த காங்கிரஸார்