தும்மும் போது என்ன நடக்கிறது? (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 30 Second

sneezing_001நமது மூக்கின் நாசித்துவாரத்தில் உள்ள முடியிழைகள், நாம் காற்றின் மூலம் உள்ளிழுக்கும் தூசு, துகள்கள் போன்றவவை இருந்தால் அவற்றை வடிகட்டும் பணியை மேற்கொள்கிறது.

மேலும் இப்பகுதியில் உள்ள மென்மையான சவ்வுப்படலம், நிறமற்ற திரவத்தை சுரக்கிறது.

அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித் தள்ளும் முயற்சியில் சவ்வுப் படலம் அதிக அளவில் நீரைச் சுரக்கிறது.

இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன.

இதுவே தும்மல் ஆகும். தும்மும்போது ஏதேனும் தொற்றுக்களினால் நாம் பாதிக்கப்பட்டிருந்தால், அவை மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது.

இதனால் தும்மும்போது, ஏதேனும் ஒரு சிறிய மெல்லிய துணியால் மூக்கினை மூடிக்கொண்டு தும்ம வேண்டும்.

தும்முல் வெளியாகும்போது துளிகள் எப்படி உருவாகின, அவை பரவும்போது எந்த அளவுடன் பரவுகின்றன, தும்மும்போது வாயின் அருகே என்ன மாற்றங்கள் நடக்கிறது? என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாம் தும்மும்போது மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளியாகும் திரவத்தின் வடிவங்களின் அளவுகளை வரைபடமாக வடிவமைத்துள்ளார்கள்.

திரவத்தின் நுண்ணிய வடிவங்களின் அளவுகளை தீர்மானித்து, அவை எப்படி வியாதிக்கிருமிகளை பரப்புகிறது என்று கண்டறிய முடியும் என்றும் தும்மலின் பரவலைக்கட்டுப்படுத்துவதான் இதன் நோக்கம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பனியால் உறைந்துபோன சாலையில் உற்சாக ஸ்கேட்டிங்: வீடியோ இணைப்பு…!!
Next post நாளை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் விபரம்…!!