செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன் போபாஸ் அழிந்து வருகிறது: அதிர்ச்சி தகவல்…!!

Read Time:1 Minute, 59 Second

b573a1a7-6432-480d-b909-52b2d0b9a97a_S_secvpfசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான ‘போபாஸ்’ படிப்படியாக அழிந்து வருகிறது என தெரியவந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனாக விளங்கும் போபாஸ் சூரிய குடும்பத்தில் உள்ள எந்தவொரு சந்திரனைக் காட்டிலும் அருகாமையில் உள்ளது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி இரண்டரை லட்சம் மைல் என்றால், செவ்வாய் கிரகத்துக்கும் போபாஸுக்கும் உள்ள இடைவெளி வெறும் மூவாயிரத்து எழுநூறு மைல் மட்டுமே.

அதிலும், செவ்வாயின் ஈர்ப்பு விசையால் போபாஸ் சிறிது சிறிதாக இழுக்கப்பட்டு வருவதால், இது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து அழிய காரணமாகியுள்ளது என தெரியவந்துள்ளது.

ஆகவே, போபாஸ் இன்னும் 3 கோடியிலிருந்து 5 கோடி ஆண்டுகளுக்குள் முழுவதுமாக அழிந்து போகும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில், ஜுபிடர் போன்ற கிரகங்களை சுற்றியிருக்கும் வளையம் போல செவ்வாய் கிரகத்தை சுற்றி இதன் துகள்கள் படரும்.

அமெரிக்காவின் பெர்கிலி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மாணவர்களான முதுகலை பட்டதாரி மாணவர் பெஞ்சமின் பிளாக் மற்றும் இளங்கலை பட்டதாரி மாணவர் துஷ்கர் மிட்டல் ஆகியோர் இதை கணித்துள்ளனர்.

ஏற்கனவே, கணிக்கப்பட்டதை விட போபாஸின் அழிவு வேகமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனை விளையாட்டுடன் வேலையும் செய்ய வைத்த புத்திசாலி தந்தை: வைரல் வீடியோ…!!
Next post நுவரெலியாவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!