உலகிலேயே அதிக வெப்பமான ஆண்டு 2015: காலநிலை அமைப்பு தகவல்…!!

Read Time:1 Minute, 50 Second

2015_hottest_002உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

1961-1990 ஆண்டுகளின் சராசரி வெப்பமாக 14 டிகிரி செல்சியஸ் பதிவானது. தற்போது 2015ம் ஆண்டு வெப்ப நிலையானது அதை விட 0.73 டிகிரி செல்சியஸ் அதிகமாகியுள்ளது.

இவ்வாறு அதிக வெப்பம் நிலவியதற்கு, எல் நினோவின் பாதிப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்த வெப்பநிலை வரவிருக்கும் 2016 ஆம் ஆண்டிலும் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நிலப்பரப்பு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையானது இந்த அக்டோபர் மாதம் மட்டும் சராசரியாக 0.98 டிகிரி செல்சியஸ் நிலவியுள்ளது.

உலகத்தலைவர்கள் சந்திக்கும் பருவநிலை உச்சி மாநாடு வரும் நவம்பர் 30 ஆம் திகதி பாரீஸில் தொடங்கவிருக்கிறது, சுமார் 12 நாட்கள் நடக்கும், இந்த மாநாட்டில் உலகில் வெப்பத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், உலக அளவில் 2 டிகிரி அளவுக்கு வெப்பத்தைக் குறைக்கவும் ஆலோசிக்கப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது மாணவியை பலாத்காரம் செய்த கனடிய ஆசிரியர்: கடுமையான தண்டனை விதிக்குமா நீதிமன்றம்…!!
Next post தொடரும் விபத்துகள்: ஆண்களே இல்லாத கிராமம்…!!