மீன்களுக்கும் காய்ச்சல் வரும்: ஆய்வில் தகவல்…!!

Read Time:2 Minute, 7 Second

dd11a1a9-6c2c-4adb-83e0-1b01a6a97a5f_S_secvpfசில குறிப்பிட்ட வகை மீன் இனங்களுக்கும் காய்ச்சல் வரும் என சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து, 72 ‘ஜீப்ராமீன்’ வகை மீன்களை ஆய்வு செய்தனர். இந்த மீன்களை சரிபாதியாக பகுத்து, ஒரு குழுவை அவை ஏற்கனவே இருக்கும் மீன் தொட்டியிலும், மற்றொரு குழுவை இயல்பை விட ஒரு செல்ஷியஸ் குளுமையான தண்ணீரிலும் விட்டனர்.

பின்னர், அனைத்து மீன்களையும், பல்வேறு சூடான பகுதிகள் அடங்கிய மீன் தொட்டியில் விட்டனர். எளிமையாக அவை நீந்திச் செல்ல இந்த மீன் தொட்டி உதவியது. எனினும், முன்னர் குளுமையான நீரில் விடப்பட்டிருந்த மீன்கள் மன அழுத்தத்துக்கு ஆளானதால், அனைத்து மீன்களும் உள்ள தற்போதைய தொட்டியில், சூடு நிறைந்த பகுதியை சூழ்ந்துகொண்டு, தமது உடலின் வெப்ப நிலையை இரண்டு முதல் நான்கு செல்ஷியஸ் அதிகரித்துக்கொண்டன.

இதன் மூலமாக மீன்கள் உணர்வுசார் காய்ச்சலுக்கு (எமோஷனல் ஃபீவர்) உள்ளாவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். மற்ற பாலுட்டிகளில் உணர்வுசார் காய்ச்சல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் மீன்களை ஆய்வு செய்ய எண்ணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்க சாக்லேட் சாப்பிட ஆசையா?
Next post குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்…!!