பிரசவத்துக்காக வைத்தியசாலையில் இருந்த நிலையில் பல்கலைக்கழக பரீட்சை எழுதிய யுவதி…!!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இணையத்தளம் ஊடக தனது பல்கலைக்கழக பரீட்சையையும் எழுதியுள்ளார்.
ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான டொமிட்ரைஸ் கொலின்ஸ் எனும் இந்த யுவதி மிடில் ஜோர்ஜியா மாநில பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்தார்.
கர்ப்பிணியாக இருந்த அவருக்கு உரிய திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே பிரசவ வலி ஏற்பட்டதால் வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 12 ஆம் திகதி அதிகாலையில் 1 மணியளவில் அவரின் பனிக்குடம் உடைந்தது.
ஆனால், அன்றைய தினம் காலை 8 மணிக்கு அவருக்குத் தனது பட்டப்படிப்புக்கான உளவியல் பாட பரீட்சையொன்றும் இருந்தது.
பிரசவம் காரணமாக பரீட்சையை ஒத்திவைப்பதற்கு அவர் விரும்பவில்லை.
இதனால், வைத்தியசாலை கட்டிலில் இருந்த நிலையிலேயே இணையத்தளம் ஊடாக மேற்படி பரீட்சையையும் எழுதினார் டொமிட்ரைஸ் கொலின்ஸ்.
இப்பரீட்சையில் விடை எழுதுவதற்கு இரு மணித்தியாலங்கள் அவகாசம் வழங்கப்படும்.
டொமிட்ரைஸ் ஒன்றரை மணித்தியாலங்களில் விடைகளை எழுதி முடித்தார்.
இப்பரீட்சையில் அவருக்கு பி சித்தி கிடைத்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
இதன்போது அவரின் சகோதரி ஸெனல் சப்மென் பிடித்த படமொன்று இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு 15,000 இற்கு அதிகமான தடவை பகிரப்பட்டுள்ளது.
சில மணித்தியாலங்களின் பின் பெண் குழந்தையொன்றை பிரசவித்தார் டொமிட்ரைஸ் கொலின்ஸ்.
“பிரசவம் காரணமாக பரீட்சையை தவிர்க்க நான் விரும்பவில்லை. இது குறித்து எனது ஆசிரியருக்கு மின்னஞ்சலில் தெரிவித்து நான் பரீட்சை எழுத விரும்புவதாக கூறினேன்.
கடும் வலியையும் பொறுத்துக்கொண்டு நான் இப்பரீட்சையை எழுதினேன்” என கொலின்ஸ் கூறினார்.
“நான் பரீட்சை எழுதும்போது எனது சகோதரி ஷெனல் மேற்படி புகைப்படத்தை பிடித்த விடயம் பிரசவத்துக்குப் பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது.
நான் எனது தொலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தபோது, இணையத்தில் ஷெனல் வெளியிட்டு என்னை “டெக்” செய்த புகைப்படம் பலரால் லைக் செய்யப்பட்டிருந்ததை கண்டேன்.
இந்தப் புகைப்படம் இந்தளவு பரவும் என ஷெனல் எண்ணியிருக்கவில்லை” எனவும் டொமிட்ரைஸ் கொலின்ஸ் கூறினார்.
அவர் 2015 ஆம் ஆண்டு குற்றவியல் நீதித்துறையில் பட்டம் பெறவுள்ளார். தான் தடய அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating