மருத்துவர்களின் அலட்சியம்: ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் அவலம்…!!

Read Time:2 Minute, 48 Second

poor_hospital_care_002பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாவதாக அதிர்ச்சி தரும் புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளது.

மருத்துவர்கள் மெத்தனமாக செயல்படுவதால் நோய்களின் உண்மை நிலையை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை வழங்க முடியாமல் போவதாக அந்த ஆய்வு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனால் பல நோயாளிகளும் நாளடைவில் இருதய நோயாளிகளாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.

நோயாளிகளுக்குண்டான நோயின் அறிகுறிகளை மருத்துவர்கள் இனம் கண்டு அதற்குண்டான மருத்துவத்தை பரிந்துரைக்கவே தாமதமாவதால் 52% பேர் சாதாரண சிகிச்சையில் இருந்து திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதாம் பிரித்தானியாவில்.

மேலும், சில மருத்துவமனைகளில் உரிய வசதிகள் ஏதும் இல்லை என்ற போதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருவதாகவும் அந்த ஆய்வு குற்றஞ்சாட்டியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளியை 14 மணி நேரத்திற்குள் அனுபவமிக்க மருத்துவர் ஒருவர் பரிசோதித்து போதிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

ஆனால் 60% நோயாளிகளை அதுபோன்ற அனுபவம் மிக்க மருத்துவர் சோதிப்பதில்லை என கூறும் அந்த அறிக்கை, இதனால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படும் சிகிச்சையும் தாமதிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த ஆய்வுகளை மேற்கொண்ட லண்டனின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் விவேக், மருத்துவர்களின் அலட்சிய போக்கினை கடுமையாக கண்டித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 ஆண்டுகளாக கேம் விளையாடிய பெண்! வீடியோ கேம் மையத்தில் இருந்து மீட்பு…!!
Next post முட்டைக்குள் மற்றொரு முட்டை…!!