விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: ரஷ்ய தூதருக்கு துருக்கி சம்மன்…!!

Read Time:1 Minute, 34 Second

73651467-f4e0-47f7-8222-f6173f0ce582_S_secvpf (1)சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது.

இந்நிலையில், ரஷ்ய தூதருக்கு துருக்கி சம்மன் அனுப்பி உள்ளது. அதில், சிரிய எல்லையில் உள்ள தங்கள் நாட்டுப் பகுதியில் விதிமுறைகளை மீறி ரஷ்ய விமானம் பறந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்த வைலட்டுகளில் ஒருவரை சிரிய எதிர்ப்பு படையினர் சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொருவரைக் காணவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கப்பூர் ஹொட்டலில் மசால்தோசையை விரும்பி சாப்பிட்ட பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)…!!
Next post 15 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்கிறார் கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவர்…!!