புயல்–வெள்ளம் பருவநிலை மாற்றத்தால் 6 லட்சம் பேர் பலி…!!

Read Time:1 Minute, 34 Second

a68c87f9-0c36-4fc8-a737-11a7c5ca0966_S_secvpfஐ.நா. சபையின் பேரிடர் ஆபத்து குறைப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 1995–ம் ஆண்டு முதல் அதாவது 20 ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட பேரழிவுகளையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றமே பேரழிவுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் புயல் வெள்ளம், பெருமழை போன்றவற்றால்தான் அதிக அளவில் உயிரிழப்புகளும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன.

புயல்–வெள்ளத்தால் கடந்த 1985–ம் ஆண்டு முதல் உலக அளவில் 6 லட்சத்து 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 4 கோடியே 10 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர். வீடுகளை இழந்து அவசர உதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பருவநிலை மாற்றத்தால் வறட்சி, வெப்பகாற்றலை மற்றும் கடும் குளிரும் நிலவுகிறது. கடந்த 20 ஆண்டு காலத்தில் மேற்கண்டவற்றால் 2 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியா கண்டத்தில்தான் இப்பாதிப்புகள் அதிகம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் கூட்டுறவு வங்கியில் திடீர் தீ விபத்து…!!
Next post அதிசயம்: கரப்பான்பூச்சி, தவளை, களிமண் தண்ணீரால் 41 நாட்கள் உயிரோடிருந்த சுரங்கத்தொழிலாளர்கள்…!!