பள்ளியில் நடந்த பாரபட்ச கொடுமைகள்: வலிகளோடு விவரித்த மாணவன்…!!

Read Time:2 Minute, 29 Second

student_letter_002இங்கிலாந்தில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவன் தான் படிக்கும் பள்ளியில் சந்தித்த பாரபட்ச கொடுமைகளின் வலிகளை வார்த்தைகளால் விவரித்துள்ளான்.
11 வயதுடைய Ali Junior Mustafa என்ற அச்சிறுவன் தற்போது இங்கிலாந்தின் யோக்ஷையர் பகுதியில் உள்ள Sirius Academy யில் சேர்ந்துள்ளான்.

இப்பள்ளியில், சக மாணவர்களோடு ஏற்பட்ட சண்டையின் காரணமாக இவனது கை முறிந்துள்ளது, மேலும் அப்பள்ளியில் அவன் சந்திக்கும் பாரபட்ச கொடுமைகள் அவன் மனதை வெகுவாக பாதித்துள்ளன.

தான் பள்ளியில் சந்திக்கும் பிரச்சனைகளை தினந்தோறும் தனது தாயிடம் Mustafa தெரிவித்துவந்துள்ளான், இதனைக்கேட்ட தாயார் தனது மகன் ஏதோ ஒரு காரணத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளான் என்பதை புரிந்துகொண்டு, அவனிடம் உனது மனதில் எழுந்துள்ள உணர்வுகளை பற்றி எழுது என்று கூறியுள்ளார்.

அச்சிறுவன் எழுதியதாவது, நான் படித்த முந்தைய பள்ளில் எனது வாழ்க்கை நன்றாக இருந்தது, சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லை, எனது கனவுகள் நனவாகும் பள்ளியாக இருந்தது.

தற்போது, புதிதாக சேர்ந்துள்ள இப்பள்ளியில் எனது கனவாகும் என்ற நம்பிக்கை இல்லை, நான் இப்பள்ளியில் இனவாத பெயரால் அழைக்கப்பட்டேன், இதனைக் கேட்டு எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

மேலும் பள்ளியில் பாரபட்சங்களை சந்தித்து, சண்டைபோடுவதே தற்போதைய எனது வாழ்க்கையாக உள்ளது என்று எழுதியுள்ளான்.

இந்த கடிதம் தொடர்பாக அப்பள்ளியின் தலைமையாசியர் Ian Ravenscroft கூறியதாவது, பள்ளியில் நடக்கும் சிறு சண்டைகளுக்காக இவ்வாறு கூறுவது பொருத்தமற்ற குற்றச்சாட்டாகும், இருப்பினும் இது தொடர்பாக விசாரணை நடத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்: குவியும் பாராட்டுக்கள்…!!
Next post நடுக்கடலில் உயிருக்கு போராடிய அகதிகள்: இரக்கமின்றி படகை மூழ்கடிக்க முயற்சித்த கடலோர காவல் படை (வீடியோ இணைப்பு)…!!