விமானத்திற்காக வாங்கிய கடனை விமானத்தை விற்றே அடைக்கும் ஏர் இந்தியா..!!

Read Time:1 Minute, 53 Second

c1f4ff73-d1ea-4000-a643-36f175b6a250_S_secvpfவிமானங்கள் வாங்குவதற்காக பெறப்பட்ட கடன், தொழில் மூலதனத்திற்காக வாங்கிய கடன் அனைத்தும் சேர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. இதில் பெரும்பாலான தொகை போயிங் 787-800 ரக விமானங்களை வாங்குவதற்காக செலவிடப்பட்டது. தற்போது, ஏர் இந்தியாவின் கடன் சுமை அதிகமாகியிருப்பதால் கடனுக்கு காரணமான விமானத்தையே விற்று நிதிதிரட்ட முடிவு செய்துள்ளது.

இந்தக் கடனை அடைப்பதற்கு நிதி திரட்டுவதற்காக, ஏர் இந்தியாவுக்கு சொந்தமான நிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை விற்று வருகிறது. அந்த வகையில் தற்போது, தன்னிடம் இருந்த 21 ட்ரீம் லைனர் விமானங்களில் 9 விமானங்களை சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு Sale and Lease Back (SLB) என்ற முறைப்படி விற்றுள்ளது.

இந்த முறையின்படி, விமானத்தின் உரிமையாளாராக இல்லாமலே ஏர் இந்தியா விருப்பப்படும் போது, விற்ற விமானத்தையே குத்தகைக்கு எடுத்துக் கொண்டு நீண்ட காலம் உபயோகிக்க முடியும். இதன் மூலம் ஏர் இந்தியாவிற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். இந்த முறைப்படி ஏற்கனவே, 12 விமானங்களை ஏர் இந்தியா விற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த இந்தியர் துபாயில் அதிரடி கைது..!!
Next post இறப்பிற்கு பின் நடப்பது என்ன? நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம்..!!