மாகாணசபை உறுப்பினர் அகிலதாசுக்கு நடந்தது என்ன?: அம்பலத்துக்கு வரும், அங்கஜனின் அட்டகாசம்..!!

Read Time:5 Minute, 59 Second

timthumbவடமாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் வற்புறுத்தலின் பேரில் தான் தனது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் ஒப்படைத்துள்ளார் என தான் சந்தேகிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை அமர்வு நேற்றைய தினம்(19) நடைபெற்றது .அதன் போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அகிலதாஸ் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன அது தொடர்பில் தெளிவு படுத்த முடியுமா? என கேட்டார்

அதற்கு பதில் அளித்த அவைத்தலைவர் இதனை இந்த சபை மண்டபத்தில் கேட்காது தனியே கேட்டு இருந்தால் விளக்கமாக பதில் அளித்து இருப்பேன்.இதில் இருந்து பல விடயங்களை கூற முடியாது. என்னை சங்கடத்திற்கு ஆளாக்கி விட்டீர்கள் என கூறி கொண்டு பதில் அளித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினர் ஆன பின்னர் அந்த இடத்திற்கு புதிதாக அகிலதாஸ் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.

புதன்கிழமை எனக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்தார் தான் வடமாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக. அந்த கடிதத்தில் அவரது கையொப்பம் தெளிவில்லாமல் காணப்பட்டது அத்துடன் அவரது இறப்பர் முத்திரையும் இல்லை. அதன் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல விடயங்களை கூறினார். அதனை இந்த இடத்தில் கூறமுடியாத நிலையில் உள்ளேன்.

தொலைபேசியில் கூறிய விடயங்களை எழுத்து மூலம் தந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறினேன். இன்றைய தினம் (வியாழக்கிழமை) கடிதம் அனுப்பியுள்ளார் அதில் தான் வற்புறுத்தலின் அடிப்படையில் தான் ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக கூறினார்.

ஒருவர் தனது சுயவிருப்பின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்ய முடியும் வற்புறுத்தலின் பேரில் என்றால் அதனை ஏற்காது விடலாம். என்பதன் அடிப்படையில் அவரது ராஜினாமா கடிதம் வற்புறுத்தலின் பெயரில் தான் அனுப்பபட்டதாக சந்தேகிப்பதால் அது தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்காது அதனை பரிசீலித்து வருகின்றேன் என தெரிவித்தார்.

அதன் போது உறுப்பினர்கள் பலர் அகிலதாஸ் வற்புறுத்தலின் பெயரில் தான் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் என்றால் மாகாணசபை கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என கோரினார்கள்

அதற்கு பதில் அளித்த அவைத்தலைவர், அகிலதாஸ் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த விசாரணைகளில் அகிலதாசுக்கு மிரட்டல் விட்டவர்கள் கண்டறியப்படுவார்கள் என தெரிவித்தார்.

.ந்த விடயத்தை சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிசாரும் யாழ் குடாநாட்டில் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.

அகிலதாஸ் கடத்தபட்டதையோ அல்லது அவர் சிறையிடப்பட்டதையோ அவரைக் கொலை செய்ய எத்தனித்தமையையோ அதற்கும் அப்பால் அவரிடம் இருந்து பதவி விலகல் கடிதம் கட்டாயத்தில் பெறப்பட்டதற்கோ அல்லது அந்த போலி கடிதத்தை மாகாண சபையில் ஒப்படைத்தமைக்கோ இதுவரை பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யவும் இல்லை, விசாரணை செய்யவும் இல்லை.

யாழ். குடாநாட்டின் எந்த ஒரு நீதிமன்றங்களிலும் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தவும் இல்லை. ஒரு அரசியல்வாதிக்கே இந்த நிலை ஏற்பட்டால் அப்பாவி யாழ் குடா நாட்டு பொதுமக்களுக்கு இத்தகைய நிலை ஏற்படும் போது என்ன நடைபெறும் என்று பொதுமக்கள் ஆதங்கப்படும் நிலையில் யாழ் குடாநாடு இன்று அச்சத்தில் உறைந்து போய் உள்ளது.

அகிலதாஸ் கடத்தபட்டமை போன்று நாளை யாழ் குடாநாட்டில் மேலும் பலர் கடத்தப்படலாம். ஆகவே, யாழ் குடாநாட்டில் பொலிசாரும் நீதிபதிகளும் இந்த வன்முறை சம்பவத்தை ஒரு முன்னுதாரணமாக எடுத்து சம்பத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

இந்த சம்பவங்களை இருட்டடிப்பு செய்யும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அங்கஜனின் விளம்பர பணத்துக்கு ஊடக விபச்சாரம் செய்யாமல் இத்தகைய நடவடிக்கைகளை கண்டிக்க முன்வர வேண்டும் என்று சுட்டி காட்ட விரும்புகின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டின் நடுவில் உலகத்தின் திரை: தொலைக்காட்சி தினம்…!!
Next post யாழ்ப்பாணத்தாருக்கு (சுமந்திரனுக்கு) காசியில் நான் கருமாதி செய்து விட்டேன்! – அன்றே சொன்னார் யோகர் சுவாமி! -மட்டு நேசன்..!!