கனடாவில் குடியேற கடுமையான போராட்டங்களை சந்தித்த கர்ப்பிணி பெண்: இரக்கம் காட்ட மறுத்த அதிகாரிகள்…!!
கனடா நாட்டில் புகலிடம் பெறுவதற்காக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் எதிர்க்கொண்ட போராட்டங்கள் அனைத்தும் பெரும் சோகத்தில் முடிவடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Freshta Hashim என்ற பெண் தன்னுடைய உறவினர்களின் எதிர்ப்பை மீறி நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
உறவினர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட, அந்நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் குடியேற சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்களுடன் வந்துள்ளார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள் அந்த பெண்ணிற்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், ‘நீ கனடா நாட்டிலிருந்து திரும்பி வரும்போது உன்னையும் உனது குடும்பத்தையும் கூண்டோடு அழித்து விடுவோம்’ என மிரட்டியுள்ளனர்.
இதனால் பெரும் மன உளைச்சலில் அந்த பெண் அவதியுற்று வந்துள்ளார். மாதங்கள் செல்ல, அந்த பெண் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக வான்கூவர் பெண்கள் மருத்துவமனையில் கடந்த திங்கள் அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், துரதிஷ்டவசமாக அவரது உடல்நிலை காரணமாக குழந்தை பிறப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்றும் தாய்நாட்டிற்கு திரும்புமாறு குடியமர்வு அதிகாரிகளும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
எனினும், எந்த சூழ்நிலையிலும் தன்னை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடாதீர்கள் என அந்த கர்ப்பிணி பெண் அதிகாரிகளை கெஞ்சி கேட்டுள்ளார்.
சூழ்நிலையை அறிந்த குடியமர்வு துறை அதிகாரிகள், அந்த பெண்ணை அண்டை நாடான அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
கர்ப்பிணி பெண் முதலில் அமெரிக்காவில் தான் குடியேற முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அங்கு குடியேற அதிக அளவு செலவாகும் என்பதால், கனடாவில் குடியேற எண்ணி அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், தற்போது அவரது சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கனடிய குடியமர்வு வழக்கறிஞரான லாரா பெஸ்ட் கூறுகையில், ‘புகலிடம் கோரி அவர்கள் முதலில் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதால், அந்நாட்டில் தான் அவர்கள் தஞ்சம் கோர வேண்டும்’ என கூறியுள்ளார்.
இந்த சட்டவிதிகளை சிறிது மாற்றிக்கொள்ளுமாறு அந்த கர்ப்பிணி பெண் கெஞ்சியுள்ளார். ஆனால், அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
கடைசி நிமிடம் வரை, கனடாவில் இருக்கும்போது குழந்தை பிறந்து விட்டால் எளிதாக புகலிட அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார்.
ஆனால், துரதிஷ்டவசமாக நேற்று இரவு 8 மணியளவில் அந்த கர்ப்பிணி பெண்ணை கனடிய குடியமர்வு அதிகாரிகள் அமெரிக்காவிற்கு திட்டமிட்டப்படி அனுப்பியுள்ளனர்.
கர்ப்பிணி பெண்ணின் இந்த போராட்டம் நிறைந்த செய்தி ஒரு தனியார் ஊடகத்தில் வெளியாவதை அறிந்த குடியமர்வு அதிகாரிகள் ‘செய்தியை வெளியிட தாமதிக்குமாறு’ அந்த செய்தி நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Average Rating