நோய் எதிர்ப்பு சக்தியை தரும் காய்கறிகள்…!!

Read Time:3 Minute, 20 Second

immunity_001நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் விரைவில் நம்மை தாக்குகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் எந்த நோய் தாக்கினாலும், விரைவில் குணமாகிவிடும் குறிப்பாக காய்கறிகளில் ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டி பாக்டீரியல் இருப்பதால் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள், உடலில் உள்ள திசுக்களை, கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

மேலும் ஆய்வுகளில் பூண்டானது பக்கவாதம், இதய நோய்கள், புற்றுநோய், நோயெதிர்ப்பு குறைபாடு, ஆர்த்ரிடிஸ் மற்றும் கண்புரை ஆகியவற்றை தடுப்பதில் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பதைத் தவிர்க்காதீர்கள்.

வெங்காயம்

வெங்காயத்தில் க்யூயர்சிடின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது புற்றுநோயின் தாக்கத்தையே குறைக்கும் அளவில் சக்தி வாய்ந்த ஒன்று. மேலும் பூண்டைப் போன்றே வெங்காயத்திலும் அல்லிசின் என்னும் அற்புதமான பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி, இவற்றில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

தக்காளி

தக்காளி அன்றாட சமையலில் சேர்க்கும் தக்காளிக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. குறிப்பாக இதில் லைகோபைன் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.

பீட்ரூட்

பீட்ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும் ஓர் அற்புதமான காய்கறி. மேலும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது இரத்த அணுக்களை குறிப்பாக இரத்த வெள்ளையணுக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. எனவே இந்த காய்கறியை தவறாமல் வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்ப்பது அவசியம்.

கீரைகள்

கீரைகளில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டீன், போன்ற நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமை மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. அதிலும் பசலைக்கீரையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், இதய நோய், புற்றுநோய் மற்றும் இதர நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாரா பீர்பாட்டிலுடன் வரும் படங்கள்…!!
Next post கிளிநொச்சி:இனந்தெரியாத நபர் தாக்குதல்..!!