இந்திரா காந்தி பிறந்த தினம்: (19-11-1917)…!!

Read Time:5 Minute, 2 Second

downloadஇந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார். இந்திரா பிரியதர்சினி அவர்களின் ஒரே குழந்தையாவார்.

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இவருக்கும் மகாத்மா காந்திக்கும் எந்த வித இரத்த தொடர்பும் இல்லை.

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் 1966-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார்.

1977-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-ல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1816- வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1881- உக்ரைனில் உள்ள ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.

1932- சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1941- இரண்டாம் உலகப்போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் எச்.எம்.எ.எஸ். சிட்னி, மற்றும் எச்.எஸ்.கே. கோர்மொரன் என்ற போர்க் கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினரும் இறந்தனர்.

1942- இரண்டாம் உலகப்போர்: ஸ்டாலின்கிராட் சண்டை- சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.

1946- ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.

1969- அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.

1969- பிரேசில் கால்பந்த வீரர் பெலே தனது 1,000-வது கோலைப் பெற்றார்.

1977- எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.

1977- போர்ச்சுக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1984- இலங்கை ராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணி வெடித்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1984- மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.

1985- பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.

1991- தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.

1999- மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.

2005- ராஜபக்சே இலங்கையின் 5-வது ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் கால வெண்கலச் சிலை: இந்தியா கொண்டு வர நடவடிக்கை…!!
Next post கல்லீரலில் ஏற்படும் நோய்களை காபி குணமாக்குமா?