பெண்களை மயக்க 93 சதவிகிதம் அதிகமாக பீட்சா உண்ணும் ஆண்கள்..!!

Read Time:1 Minute, 56 Second

2d09bbd3-5953-4ad4-a22e-2b5cc35aeb35_S_secvpfபொதுவாக மேற்கத்திய நாடுகளில் பீட்சா உட்கொள்வது கவர்ச்சியான பழக்கமாக கருதப்படுகின்றன. இதனால்தானோ, என்னவோ? பெண்களை கவரும் முயற்சியில் ஆண்கள் 93 மூன்று சதவிகிதம் அதிகமாக பீட்சா உட்கொள்கின்றனர் என சமீபத்திய ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகம் மருத்துவர் கெவின் க்னிஃபின் தலைமையில் பருவம் வந்த 105 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியது. பீட்சா உள்ளிட்ட இத்தாலிய உணவு வகைகளைப் பரிமாறும் இத்தாலிய உணவகத்தில் இவர்களது உணவுப் பழக்கம் கண்காணிக்கப்பட்டது.

இந்த ஆய்வில், சக ஆண் நண்பர்களுடன் பீட்சா உண்ணும் அளவைக் காட்டிலும், பெண் தோழிகளுடன் உண்ணும் ஆண்கள் தொண்ணூற்று மூன்று சதவிகிதம் அதிகமாக உண்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் பீட்சா மட்டுமின்றி சாலட் வகைகளையும் தமது பெண் தோழிகள் முன்பாக உண்ணும்போது ஆண்கள் எண்பத்து ஆறு சதவிகிதம் அதிகமாக உட்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில், பெண்களின் உண்ணும் பழக்கம் இருபாலினத்தவருடனும் உண்ணும்போதும் ஒரே மாதிரிதான் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, ஆண்கள் பெண்ணைக் கவருவதற்காக இதுபோல அதீத அளவில் உண்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக கெவின் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போரால் உறவுகளை இழந்த குழந்தைகளின் நிம்மதியற்ற தூக்கம்: நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்…!!
Next post வேப்பேரியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…!!