முதன்முறையாக விண்வெளியில் பூச்செடி வளர்க்கும் நாசா மையம்…!!

Read Time:2 Minute, 42 Second

2c1697a3-bb88-4869-b4aa-5568e7caf03c_S_secvpfவிண்வெளியில் ‘நாசா’ மையம் முதன் முறையாக பூச்செடி வளர்க்கிறது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் மிதக்கும் ஆய்வகம் உருவாக்கி வருகின்றனர். அப்பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

6 மாதத்துக்கு ஒரு முறை 3 பேர் தங்கி ஆய்வக கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குரிய விசேஷ உணவு வகைகள் பூமியில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விண்வெளி ஆய்வகத்திலேயே வீரர்கள் சாப்பிடும் வகையில் காய்கறிகளை பயிரிட ‘நாசா’ மையம் ஆய்வுகளை மேற்கொண்டது.

‘நாசா’ விண்வெளி விஞ்ஞானி கெஜல் லிண்ட்கிரன் அதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு பசலைக்கீரையை அங்கு பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.

அதை தொடர்ந்து அங்கு பூச்செடிகளை பயிரிடும் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ‘ஜின்னியாஸ்’ என்ற பூச்செடியை விண்வெளி ஆய்வகத்தில் பயிரிடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘ஜின்னியாஸ்’ பூச்செடி 60 நாளில் வளர்ந்து பூக்கள் பூக்க கூடியது. இந்த செடிகள் முளைத்து வளர்வதற்கு தேவையான வெளிச்சம் எல்.இ.டி. விளக்குகள் மூலம் பாய்ச்சப்பட உள்ளது.

தற்போது நடைபெற்ற ஆய்வில் ‘ஜின்னியாஸ்’ ரக பூச்செடிகளை விண்வெளியில் பயிரிடும் சாத்தியம் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, வருகிற 2016–ம் ஆண்டு தொடக்கத்தில் விண்வெளியில் இது பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பசலை கீரை தவிர வேறு வகை காய்கறி பயிர்கள், தக்காளி போன்ற பழவகை பயிர்கள் பயிரிடுவது குறித்த ஆய்வுக்கு ஏதுவாக அமையும் என விஞ்ஞானி லிண்ட்கிரன் தெரிவித்தார். இதற்கிடையே வருகிற 2017–ம் ஆண்டில் விண்வெளி ஆய்வகத்தில் தக்காளி பயிரிட ‘நாசா’ திட்டமிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது 10 பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீச்சு…!!
Next post வேலூரில் பாலாறு வெள்ளத்தில் முழ்கி மாணவன் பலி: 2–வது நாளாக உடலை தேடும் பணி தீவிரம்…!!