ஐந்தாவதும் சகோதரியா?: அதிர்ச்சியடையும் சிறுவனின் புகைப்படம்…!!

Read Time:2 Minute, 6 Second

5dd8f92d-8040-488f-9fca-4e4f4071dbeb_S_secvpfஅமெரிக்காவின் ஆண்ட்ரூ மற்றும் லோரா தம்பதியர் தமது பேஸ்புக் பக்கத்தில், இளவரசி போல உடையணிந்து கொண்டுள்ள நான்கு பெண் குழந்தைகளிடையே அவர்களது மூத்த சகோதரனான மேத்தியூ(6) அதிர்ச்சியாக இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தைச் சேர்ந்த மேத்தியூ லாஸ்ட்டுக்கு ஏற்கனவே நான்கு சகோதரிகள். நாட்டலி(4), ஆனிமேரி(2), கேத்தரீன்(2), எலிசபெத்(2) என நான்கு சகோதரிகளிடையே கி்ண்டல், கேலிக்கு உள்ளாகிய மேத்தியூ இவர்களை சமாளிக்க முடியாமல், சிக்கித் தவித்து வருகின்றான்.

தற்போது மேத்தியூவின் பெற்றோர் மீண்டும் தமக்கு அடுத்த பெண் குழந்தைப் பிறக்கப்போகும் செய்தியை குழந்தைகளிடம் தெரிவித்தனர். பெண் குழந்தைகள் அனைவரும் இந்த செய்தியைக் கேட்டதும் உற்சாகமடைந்தனர். ஆனால், அவர்களது அண்ணனான மேத்தியூ இந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தான்.

இந்த சம்பவத்தை புகைப்படமெடுத்து தமது பேஸ்புக் பக்கத்தில் ஆண்ட்ரூ மற்றும் லோரா தம்பதியர் வெளியிட்டிருந்தனர். ஐந்தாவதும் சகோதரியா? என்ற கேள்வியுடன் அதிர்ச்சியடையும் மேத்தியூவின் புகைப்படம் பேஸ்புக்கைக் கலக்கி வருகின்றது.

சகோதரிகளுடன் வளர்வதால் கிடைக்கும் பெண்களைப் பற்றிய புரிதல் மேத்தியூவுக்கு வளர்ச்சியடைந்த பின்னர் தெரியவரும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுமந்திரனின் குற்றச்சாட்டுக்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலடி! (இது எப்படி இருக்கு?)..!!
Next post ஓசியில் செல்போன் கொடுக்காததால் கடை ஊழியரை கடத்தி தாக்குதல்…!!