சிரியாவில் பயிற்சி பெற்று பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிக்கு போலீஸ் வலை..!!

Read Time:3 Minute, 51 Second

timthumb (12)பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 129 உயிர்களை கொள்ளைகொண்ட தொடர் தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம்தீட்டி தந்தவன், சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீசாரால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்டெல்ஹமித் அபவுட்(28) என்று தெரியவந்துள்ளது.

மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான். இங்கிருந்தபடியே சிரியாவுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன், பாரிஸ் தாக்குதலின்போது மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய பிராஹிம் அப்டெசலாம் என்பவனுடனும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றும் தேடப்பட்டு வரும் பலருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக பிரான்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்டெல்ஹமித் அபவுட்-டும், பாரிஸ் தாக்குதலில் பலியான பிராஹிம் அப்டெசலாம் என்பவனும் பெல்ஜியம் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த மாலென்பீக் பகுதியில் ஒன்றாக வசித்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முஹம்மது நபியை இழிவுப்படுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பின்னர் பிரான்ஸ் போலீசாரை கொல்ல திட்டமிட்டபோது இவர்களின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் சிரியாவுக்கு தப்பிச்சென்ற அப்டெல்ஹமித் அபவுட், அங்கிருந்தபடியே பாரிசில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதலுக்கு திட்டம்தீட்டி தந்துள்ளான். பெல்ஜியம் நாட்டில் இவன் மீதான தீவிரவாத வழக்குகளின் அடிப்படையில், தலைமறைவாக இருக்கும் இவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிரியாவில் இருந்தவாறு அபு உமர் அல்-பல்ஜிக்கி என்ற பெயரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவான ஒரு பத்திரிகைக்கு சமீபத்தில் இவன் பேட்டி அளித்துள்ளான்.

‘எனது பெயரும், புகைப்படங்களும் பெல்ஜியம் நாட்டு பத்திரிகைகள் அனைத்திலும் பரவலாக வெளிவந்த நிலையிலும் என்னால் அதே நாட்டில் இருந்தபடி அவர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்களை நடத்த முடிந்தது. பின்னர், அவசியம் ஏற்பட்டபோது அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிவரவும் முடிந்துள்ளது’ என அந்தப் பேட்டியின்போது அப்டெல்ஹமித் அபவுட் குறிப்பிட்டுள்ளான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐதராபாத் பள்ளியில் லிப்ட் கதவுக்குள் தலை சிக்கி 4 வயது சிறுமி பலி..!!
Next post பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது: 13 பேர் பலி…!!