மலையகத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (17.11.2015) சூரசம்ஹாரம் நிகழ்வு…!!

Read Time:1 Minute, 38 Second

DSC01145தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியது. சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான 17.11.2015 அன்று முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.

அந்தவகையில் மலையகத்தில் அட்டன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் 17.11.2015 அன்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது.

வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது.

இந்த வகையில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொந்த இடத்தில் குடியேற்றுங்கள் : முதல்வரிடம் கோணாப் புலனாய்வு முகாம் மக்கள் கோரிக்கை..!!
Next post வால் நட்சத்திரத்தில் சவப்பெட்டி – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..!!