கூட்டமைப்பின் தலையீட்டையடுத்து கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

Read Time:1 Minute, 31 Second

80804905Batticaloa-Prison-300x198கடந்த 10 தினங்களாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிரீநேசன், மற்றும் சீ.யோகேஸ்பரன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராஜசிங்கம் ஆகியோர் குறித்த சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த 10 அரசியல் கைதிகளுக்கும் இளநீர் கொடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தனர்.

நேற்றைய தினம் கைதிகள் விடுதலை விடயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், புனர்வாழ்வளித்து விடுதலையளிப்பது குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைதிகளிடம் எடுத்துக் கூறியதையடுத்தே, போராட்டம் முடிவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைப்பொருளுடன் பெண் கைது..!!
Next post எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது- சுவாமிநாதன் [படங்கள் இணைப்பு]