பெண் குழந்தைகளையே தத்தெடுக்க விரும்பும் தம்பதிகள் – பாரிய சமூக மாற்றம்..!!

Read Time:5 Minute, 0 Second

timthumbபல காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதியர், குழந்தைகளை தத்தெடுக்கின்றனர். இந்தியாவில் அவ்வாறு தத்தெடுக்கும் பெற்றோர், கடந்த மூன்றாண்டுகளில், அதிக அளவில் பெண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில், 60 சதவீதம் பெண் குழந்தைகள் இது, சமூக மாற்றத்தை காட்டுகிறது´ என, இந்திய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், நாடு முழுவதும் உள்ள பெற்றோரின் தத்தெடுப்பு விருப்பத்தில் மாற்றம் தெரியவந்துள்ளது. வழக்கமாக, சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண் குழந்தைகளுக்குத் தான் அமோக வரவேற்பு இருந்த நிலையில், பெண் குழந்தைகளை தத்தெடுக்க, ஏராளமானோர் முன்வந்துள்ளது தெரியவருகிறது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* ஆண் குழந்தைகளிடம் கிடைக்காத அன்பு, கடைசி வரை பெண் குழந்தைகளிடம் கிடைக்கிறது என்பதால், தத்தெடுப்பவர்கள் மத்தியில் பெண் குழந்தைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

* தத்தெடுக்க தகுதியாக உள்ள குழந்தைகளில், ஆண் குழந்தைகள் எண்ணிக்கை மிகக் குறைவு. அதாவது, அனாதை இல்லங்களில், ஆண் குழந்தைகள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. மேலும், ஆண் குழந்தைகளுக்காக, பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரித்துள்ளதாக கூறும் புள்ளிவிவரங்கள், கீழ்கண்ட தகவல்களையும் தெரிவிக்கின்றன.

பெண் குழந்தைகள் தத்தெடுப்பு, நாடு முழுவதும் அதிகரித்திருந்தாலும், குறிப்பாக, ஹரியானா, பீஹார், உ.பி., போன்ற, ஆண் ஆதிக்க சமுதாயங்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. கல்வியறிவு மிகுந்துள்ள, மஹாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களிலும் இந்நிலை காணப்படுகிறது.

குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாத தம்பதியர் மட்டுமின்றி, ´சிங்கிள் பேரன்ட் பேமிலி´ எனப்படும், ஆண் அல்லது பெண் மட்டுமே உள்ள குடும்பத்திலும், பெண் குழந்தைகளுக்குத் தான் வரவேற்பு அதிகம் உள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில், 60 சதவீத பெண் குழந்தைகளும், 40 சதவீத ஆண் குழந்தைகளும் தத்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் ஏப்ரல் – ஜூன் மாதங்களில், நாடு முழுவதும் உள்ள தத்தெடுப்பு மையங்களில், குழந்தைகளை தத்து வழங்க கோரி வந்த விண்ணப்பங்களில், 1,241 விண்ணப்பங்கள் பெண் குழந்தைகள் கேட்டு வந்துள்ளன, 718 விண்ணப்பங்கள், ஆண் குழந்தைகள் கேட்டு வந்துள்ளன.

அதிக எண்ணிக்கையில் பெண் குழந்தைகளை தத்து கொடுத்த மாநிலங்களில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது, அதையடுத்து, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளது.

குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர், அதற்காக விண்ணப்பம் செய்து, அதிகபட்சம், 6 – 8 மாதங்களுக்குள் குழந்தைகளை தத்து பெறுகின்றனர். நாடு முழுவதும், 409 தத்தெடுப்பு மையங்கள் எனப்படும், குழந்தைகளை, பிறருக்கு தத்து கொடுக்கும் மையங்கள் உள்ளன.

இதில், 2009ல், 2,500 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. 2010க்குப் பிறகு, ஆண்டுக்கு, 6,000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்து, 2,000 குழந்தைகள் தத்து கொடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 வயது சிறுவனை ‘பீடி’ குடிக்க வைத்த கும்பல்: WhatsApp வீடியோவால் அதிர்ச்சி (வீடியோ இணைப்பு)…!!
Next post தேனி அருகே 16 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்..!!