நடிகை காவேரிக்கு மருத்துவ பரிசோதனை!!!
கணவன் செய்து கொள்ள இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி போலீசில் புகார் கொடுத்த நடிகைக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகையாக அறிமுகம் ஆனவர் காவேரி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ஒளிப்பதிவாளர் வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதாகவும், அதில் தான் கர்ப்பம் அடைந்து இருப்பதாகவும், ஆனால் தனது கணவர் வைத்தி அவரது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், வைத்தீஸ்வரனை தேடி திருச்சி அருகே உள்ள கீரனூருக்கு சென்றனர். அங்கு வாசவி திருமண மண்டபத்தில் நடக்க இருந்த திருமணத்தை தடுத்தனர். அத்துடன் வைத்தீஸ்வரனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வர முயன்றனர். ஆனால் அதற்குள் திருச்சியில் ஐஜியை நேரில் சந்தித்து காவேரியின் புகார் பற்றி விளக்கமளிக்க வைத்தீஸ்வரன் சென்றார். அவரை பிடிக்க சென்னை போலீசார் திருச்சி ஐஜி அலுவலகம் செல்ல முயன்றனர். இதை தெரிந்து கொண்ட வைத்தீஸ்வரன் அங்கிருந்து மாயமானார். இதற்குள் மணப்பெண் சுப்புலட்சுமி மற்றும் அவரது தந்தை ஆனந்தகுமார் ஆகியோரிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மணமகளும், அவரது தந்தையும் திருமணத்திற்கு மறுத்துள்ளனர். இதனால் திருமணம் தடைபட்டது. மாயமான வைத்தீஸ்வரனை பிடிக்க உள்ளூர் போலீசாருடன் சென்னை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வைத்தீஸ்வரன் தான் காவேரியுடன் நட்புடன் மட்டுமே பழகியதாகவும், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகை காவேரி புகாரில் கூறியுள்ளது உண்மைதானா என்பதை கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், இன்றோ நாளையோ மருத்துவ பரிசோதனை செய்யப்படலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...