புயலில் சிக்கிய கர்ப்பிணி பெண்.. தடைகளை தாண்டி காப்பாற்றிய நபர்: குவியும் பாராட்டு..!!!

Read Time:1 Minute, 57 Second

cuddalore_baby_002-615x465சிதம்பரம் அருகே புயலில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிய 108 ஆம்புலன்ஸை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
சிதம்பரம் அருகே கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி செல்வக்குமாரி (25), நிறைமாத கர்ப்பிணி.

தீபாவளி பண்டிகையன்று காலை பிரசவவலி எடுத்ததை அடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளனர்.

அப்போது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஓட்டுநர் வெங்கடேசன், கிள்ளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு தனது ஜீப்பில் ஆட்களுடன் சென்ற அவர், மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்தி வழி ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர் ஆம்புலன்ஸ் பழுதாகி நின்ற போது, ஜீப்பில் கயிற்றை கட்டி ஆம்புலன்ஸை இழுத்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் செல்வக்குமாரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கர்ப்பிணி பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றிய ரவீந்திரனுக்கு செல்வராஜின் குடும்பத்தினர் மற்றும் கிள்ளை கிராம மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வயது வளர்ப்பு மகனை கொடுமைப் படுத்திய தந்தை: உளவியல் சிகிச்சை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்..!!
Next post சொக்லேட் என நினைத்து பட்டாசை உண்ட சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்..!!