ஒரே நாளில் ஐந்தாயிரம் திருமணங்கள்: நடத்த இடமின்றி டில்லிவாசிகள் திணறல்

Read Time:3 Minute, 3 Second

aniwedding_couple.gifதிருமண சீசன் துவங்க உள்ளது. ஆனால், திருமண மண்டபம் கிடைக்காமல் திணறிப்போயுள்ளனர் டில்லி வாசிகள். டில்லியில் பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. இப் போது புதிதாக திருமண மண்டபம் பதிவு செய்வது தொடர்பான பிரச்னை முளைத்துள்ளது. நவம்பர் இறுதியில் டில்லியில் திருமண சீசன் துவங்கும். இந்த ஆண்டு சீசன் இன்று 21ம் தேதி துவங்குகிறது. திருமணம் நிச்சயத்துக்கு முன்பே டில்லிவாசிகள் திருமண மண்டபத் தை பதிவு செய்ய வேண்டும். அப் படி செய்யாவிட்டால் திருமணத்தை எங்காவது கோவில்களில் நெரிசலுக்கு இடையே நடத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு முன்பே மண்டபங் கள் பதிவு செய்யப்பட்டு விடுகின் றன. இந்த ஆண்டு நெருக்கடி இன்னும் அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பும் பதிவு செய்ய மண்டபம் கிடைக்காத நிலை. திருமணம் நிச்சயித்த பலர் தங்கள் திருமணத்தை எங்கே நடத்துவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு இன்று மட்டும் டில்லியில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான திருமணங்கள் நடக்கிறது. டில்லியில் திருமணம் நடத்த ஏற்ற மண்டபம், பூங்கா, சமூகநலக் கூடம், பண்ணை வீடு போன்றவை இரண்டாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளன. சீசனில் திருமண மண்டபங்களை பதிவு செய்வது தான் டில்லிவாசிகளுக்கு இப்போது முக்கிய பிரச்னை.

பண்ணை வீடுகளில் திருமணம் நடத்த அரசு அனுமதித்திருந்தாலும் அங்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய இசைக் கருவிகளை வாசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லிவாசிகள் திருமண நடைமுறையில் பேண்டு வாத்தியம் இசைப்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. டில்லி மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் 14 ஆயிரம் உள்ளன. இவற்றில் 746ல் தான் திருமணம் நடத்த வசதியுள்ளது.

நட்சத்திர ஓட்டல் போன்ற பெரிய ஓட்டல்களில் திருமணம் நடத்துவது ஆடம்பரமானது. ஆனால், அங்கு பேண்டு வாத்தியம் வாசிக்க அனுமதி கிடையாது. திருமணம் நடத்த டில்லி மாநகராட்சி பூங்காக்களை ஷிப்ட் முறையில் பயன்படுத்த டில்லிவாசிகள் போட்டிப் போடுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மீண்டும் மன்மத ராணி சாயா சிங்!!!
Next post ஜப்பானில் வெளிநாட்டினர் அனைவரும் போட்டோ எடுக்கப்படுவார்கள்; தீவிரவாதத்தை தடுப்பதற்காக