எவ்வித பாதுகாப்புமின்றி ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம் (வீடியோ இணைப்பு)

Read Time:1 Minute, 54 Second

effel_tower_002பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், எவ்வித பாதுகாப்புமின்றி பிரான்சின் ஈபிள் கோபுரத்தின் மீது ஏறி சாகசம் புரிந்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் (வயது 24), யூடியூப்பில் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், எவ்வித பாதுகாப்புமின்றி சட்டவிரோதமாக பிரான்சின் ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம் புரிந்துள்ளார்.

இரவு 1 மணியளவில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் படாதவாறு கயிறுகள் ஏதுமின்றி கம்பிகளை பிடித்துக் கொண்டே ஏறியுள்ளார்.

அடுத்த நாள் காலை 9 மணியளவில் இவரை பார்த்த அதிகாரிகள், பத்திரமாக கீழே இறக்கி விசாரணை நடத்தியுள்ளனர், சுமார் 6 மணிநேர விசாரணைக்கு பிறகு விடுவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜேம்ஸ், ஈபிள் கோபுரத்தில் ஏறுவது தனது வாழ்நாள் லட்சியங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதுபோன்று தாம் ஏறமாட்டேன் என தெரிவித்த பின்னரே பொலிசார் தன்னை விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈபிள் கோபுரத்தின் மேலே இருந்தவண்ணம் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ஜிசாட்-15 செயற்கைகோள்..!! (வீடியோ இணைப்பு)
Next post பத்து வயது சிறுமி கர்ப்பம் தரித்த சம்பவம்..!!