கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும் சாதனை!! பட்டியலில் முதல் இடம் பிடித்தார் வனிஷா!

Read Time:2 Minute, 48 Second

உலக கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும், தத்தமது துறைகளில் முன்னணியில் உள்ளனர். முதல் 20 பெண் வாரிசுகளின் பட்டியலில் உலக கோடீஸ்வரரும், வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா மிட்டல் பாட்டியா முதல் இடத்தில் உள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு தோறும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் இடம் பெற் றுள்ள கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகள் பற்றி போர்ப்ஸ்.காம் இணைய தளம் ஒரு ஆய்வு நடத்தி, அதில் முன்னணியில் 20 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்களின் மகள்கள் வெறும் அலங்கார பதுமைகளாக வலம் வருவதில்லை. தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடும் உழைப்பாளிகளாக உள்ளனர் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. முதல் 20 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண் வாரிசுகள் அனைவரும் 40 வயதுக்கு உட்பட்டவர்க ளே. அவர்களில் முதல் இடத்தில் வருபவர் வனிஷா மிட்டல் பாட்டியா. இவர் உலக கோடீஸ்வரர் லட்சுமி மிட்டலின் மகள். தெற்கு ஆசியா குறித்த படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். மிட்டல் ஸ்டீல் நிறுவனத்தில் இயக்குனர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். 2005ம் ஆண்டு இவரது திருமணத்தை லட்சுமி மிட்டல் ரூ.240 கோடி செலவில் நடத்தி காட்டி அனைவரையும் வியப்படைய வைத்தார்.

பட்டியலில் இரண்டாவது இடத்தில் வருபவர் உலக கோடீஸ்வரர் பெர்னார்டு அர்னால்டு என்பவரின் மக் டெல்பின் அர் னால்டு கான்சியா. இவரது தந்தை பெர்னார்டு அர்னால்டு பிரபலமான ஆடம்பர பொருட்கள் விற்பனை நிறுவனத்தை (எல்.வி.எம். எச்.,) நடத்தி வருகிறார். மகள் கான்சியா அந்த நிறுவனத்தின் இயக்குனர்.

பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஸ்பெயின் நாட்டு கோடீஸ்வரர் அமன்சியோ ஓர்டிகாவின் மகள் மார்டா ஓர்டிகா. இவர் “ஜாரா’ என்ற துணிகள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடிகை காவேரிக்கு மருத்துவ பரிசோதனை!!!
Next post தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய 5 அரசு ஊழியர்கள் கைது