தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல.. ஆறு நாள் கொண்டாட்டம்…!!
தீபாவளி என்பது நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படும் மிகவும் புகழ்பெற்ற ஒரு பண்டிகையாகும். சொல்லப்போனால், பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இந்திய துணைகண்டத்தோடு நின்று விடுவதில்லை. உலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இந்த பண்டிகையை மிகவும் கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
தீபாவளி பண்டிகை என்பது இந்தியாவின் தென் பகுதிகளில் 3 நாட்களுக்கு கொண்டாடப்படும். ஆனால் நாட்டின் வட பகுதிகளில் 6 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இந்த கட்டுரையில் தீபாவளியின் முக்கியத்துவத்தையும், ஆறு நாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் தான் பார்க்கப் போகிறோம்.
தீபங்களின் திருவிழா என பரவலாக அழைக்கப்படும் இந்த பண்டிகையில், பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கூடிய பண்டிகையின் அடையாளமாகும். அதனால் மேலும் படித்து, தீபாவளியை ஏன் ஆறு நாட்கள் கொண்டாடுகிறார்கள் என்பதையும், ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும் பார்க்கலாம்.
முதல் நாள்
தீபாவளியின் முதல் நாளன்று, பசுமாடு வழிப்படப்படும். நிராசை அடைந்து மறைந்த வேனா அரசரின் புதல்வனான ப்ரித்து அரசன், தன் தந்தையின் தவறான ஆட்சிக்கு ஈடு செய்யும் வகையில் பசுவாக குறிக்கப்படும் கடவுளிடம் ஆசீர்வாதம் பெறுமாறு பூமியில் இருந்து கோரினான் என புராணம் கூறுகிறது. வேனா அரசனின் தீய ஆட்சியில் மிகப்பெரிய பஞ்சம் வாட்டியது. இந்த தீய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ப்ரித்து அரசன், பசுவிடம் பால் கறந்து, பூமியில் வளத்தை அள்ளித் தந்தார்.
இரண்டாம் நாள்
தீபாவளியின் இரண்டாம் நாள் தான் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் முதல் நாள் தீபாவளியாகும். இந்த நாளை தன்டேராஸ் என கூறுவார்கள். சந்திர மாதத்தின் இரண்டாம் பகுதியில் 133 ஆம் நாளன்று இது ஏற்படும். தங்கம் மற்றும் பிற வடிவில் சொத்து வாங்க இந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் கடவுள்களின் மருத்துவரான தன்வந்திரியின் பிறந்த நாளாகும். தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தை அருள, கடவுளை வணங்குவதற்கான மங்களகரமான நாளாகவும் இது கருதப்படுகிறது.
மூன்றாம் நாள்
தீபாவளியின் மூன்றாவது நாளை, நரக சதுர்தசி என அழைப்பார்கள். இது நரகாசுரனின் அழிவை குறிப்பதாகும். தீய சக்தியை நல்ல சக்தி அழித்ததை இந்த நாள் குறிக்கும். இந்த நாளின் போது நம் வீட்டை தீய சக்திகள் அண்டாமல் இருக்க வீட்டை ரங்கோலி கோலத்தால் அலங்கரிப்பார்கள்.
நான்காம் நாள்
தீபாவளியின் நான்காவது நாளன்று லக்ஷ்மி தேவி வணங்கப்படுவார். லக்ஷ்மி தேவியை வீட்டிற்கு வரவேற்க வீட்டில் விளக்குகள் ஏற்றப்படும். வீட்டிற்கு லக்ஷ்மி தேவியை வரவேற்பது, பொதுவான ஆரோக்கியத்தையும், வளத்தையும் வரவேற்பதைக் குறிக்கும்.
ஐந்தாம் நாள்
தீபாவளியின் ஐந்தாவது நாளை கோவர்தன் பூஜை என்றும் அழைப்பார்கள். தன் சக மனிதர்களை வெள்ளத்தில் இருந்தும், மழையில் இருந்தும் காப்பாற்ற கோவர்தன மலையை கிருஷ்ண பரமாத்மா தூக்கியத்தைக் குறிப்பதே இந்த நாளாகும். கர்நாடகா மற்றும் தமிழ் நாடு போன்ற தென்னக மாநிலங்களில் இந்த ஐந்தாம் நாளை பாலி பட்யமி என அழைப்பார்கள். இந்த நாளில் தான் விஷ்ணு பகவான் அசுர அரசனான பாலியை அழித்துள்ளார். மராத்தியர்கள் இந்த நாளை நவ தியாஸ் அல்லது புதிய தினம் என அழைக்கிறார்கள்.
ஆறாம் நாள்
ஆறாவது நாளை பாய்துஜ் எனவும் அழைக்கிறார்கள். சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பை நினைவுப்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வங்காள நாட்டை சேர்ந்தவர்கள் இந்த நாளை பாய் போட்டா எனவும், குஜராத்தியர்கள் இந்த நாளை பாய் பிஜ் எனவும் அழைப்பார்கள்.
இந்த நாளின் போது தான் மரணத்தின் கடவுளான யமதர்மன் தன் தங்கையான யாமியை (யமுனை நதி) சந்தித்தார் என புராணம் கூறுகிறது. இந்த நாளின் போது, எப்படி தன் சகோதரனான எமனுக்கு யாமி விருந்து படைத்தாரோ, அதே போல் இந்நாளில் சகோதரர்களும், சகோதரிகளும் உணவை பகிர்ந்து கொள்வார்கள்.
Average Rating