தரையிறங்கும்போது சுவிஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிரடியாக செயல்பட்ட விமானிகள்..!!

Read Time:2 Minute, 27 Second

c7b64966eadb6190978522fba01419f337ebb0e72e626e28593d0aeb7913cf88சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடைசி நிமிடத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அதிரடியாக செய்லபட்ட விமானிகள் பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர்.
சுவிஸின் Airbus A330-300 என்ற விமானம் 210 பயணிகளுடன் கடந்த வியாழக்கிழமை நியூயோர்க்கில் இருந்து புறப்பட்டுள்ளது.

சுவிஸில் உள்ள ஜெனிவா விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்தவித பிரச்சனையும் இன்றி ஜெனிவா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இறங்குவதற்காக விமானம் 500 மீற்றர் உயரத்திற்கு தாழ்வாக பறந்து வந்துள்ளது.

ஓடுபாதையில் இறங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர், விமானத்தின் Auto Pilot தொழில்நுட்பம் திடீரென செயல்படாமல் இருந்துள்ளதை விமானிகள் கவனித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதே நிலையில், விமானத்தை தரையிறக்கினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்படை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை மேல் எழுப்பி சென்றுள்ளனர்.

கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த விமானிகள், விமானத்தை வேறு பாதையில் செலுத்தி பேசல் நகரத்தில் இருக்கும் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.

பேசல் விமான நிலையத்திற்கு விமானம் வந்தவுடன், Manual Pilot என்கிற தொழில்நுட்பத்திற்கு மாற்றியதால், எந்தவித ஆபத்தும் இன்றி விமானம் தரையிறங்கியுள்ளது.

சுவிஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் நேற்று வெளியிட்ட இந்த தகவலை தொடர்ந்து, விமானத்தில் நிகழ்ந்த கோளாறு அரிதாக ஏற்படும் என்றும், அதனை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிப்ட் உடைந்து விழுந்து ஒருவர் பலி..!!
Next post எவன்கார்ட் சர்ச்சையை கையிலெடுத்தார் ஜனாதிபதி…!!