பெற்ற மகளை 4 வருடங்களாக கற்பழித்த தந்தை: ஒழுக்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்த நீதிமன்றம்…!!

Read Time:4 Minute, 15 Second

dad_rape_001பிரித்தானியா நாட்டில் பெற்ற மகளை 4 வருடங்களாக கற்பழித்து வந்த தந்தையின் தண்டனைக்காலம் முடிவு பெறுவதற்கு முன்னதாகவே நீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள டேவோன் நகரில் டேவிட் மேனிங் (47) மற்றும் மேண்டி மேனிங்(47) ஆகியவருக்கு பெக்கி ஹெர்பெட்(20) என்ற மகளுடன் சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் வசித்து வந்துள்ளனர்.

கிறித்துவ வழிபாடுகளில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள அந்த குடும்ப உறுப்பினர்கள் நாள் தவறாமல் தேவாலயம் சென்று வந்துள்ளனர்.

ஆனால், கிறித்துவ மதத்திற்கு எதிரான செயல்களில் தந்தையான டேவிட் ஈடுப்பட்டு வந்தது அவரது மனைவிக்கு கூட தெரியாமல் இருந்துள்ளது.

பெக்கி 9 வயதை அடைந்தவுடன் அவரது தந்தையான டேவிட்டின் அனுகுமுறைகள் கொடூரமாக மாறியுள்ளது. மகளின் அங்கங்களை தொட்டு, தீண்டியவாறு டேவிட் எப்போதும் பேசி வந்துள்ளார்.

‘எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள்’ என பெக்கி கேள்வி எழுப்பிய போது, ‘உனது உடல் உறுப்புகள் நன்றாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ச்சி அடைகின்றனவா என பரிசோதனை செய்கிறேன்’ என டேவிட் பதிலளித்துள்ளார்.

தந்தையின் பேச்சை உண்மை என நம்பிய பெக்கி டேவிட்டின் செயல்களை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், பெக்கி 11 வயதை அடைந்தவுடன் டேவிட்டின் நடவடிக்கை அத்துமீறியுள்ளது.

தனது மனைவி அலுவலகம் சென்றுவிட்டதை அறிந்த டேவிட், மகளின் அறைக்குள் சென்று அவரது ஆடைகளை கலைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

தந்தை தவறு செய்கிறார் என்பதை உணர்ந்த மகள், தந்தையை கெஞ்சியும் மனம் இறங்காத அவர் மகளை துடிக்க துடிக்க கற்பழித்துள்ளார்.

மேலும், இதனை தாயாரிடம் தெரிவிக்க கூடாது என மிரட்டியும் வைத்துள்ளார். இதேபோல், 4 ஆண்டுகளாக பல முறை மகளை கற்பழித்த தந்தையின் கொடூர செயல் பெக்கியின் பள்ளி தோழி மூலம் பொலிசாருக்கு தெரிய வந்தது.

டேவிட் மீது 7 விதமான குற்றங்கள் நிரூபணம் ஆனதை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு நீதிமன்றம் அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கடந்த 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த டேவிட்டை இந்தாண்டு ஒழுக்கமான நடவடிக்கையின் அடிப்படையில் பாதியிலேயே நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

தன்னுடைய கணவன் சிறையில் இருந்து வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அவருடைய செயல்களை மன்னித்து விடும்படி சில தினங்களுக்கு முன்னர் தாயார் பெக்கியிடம் கூறியுள்ளார்.

ஆனால், பெற்ற மகளையே கற்பழித்த தந்தையை தான் மன்னிக்க போவதில்லை என்றும், அவரை தனது வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அண்மையில் வெளியானபோது, எதிர்வரும் 2019ம் ஆண்டு வரை பெக்கியை சந்திக்க டேவிட்டிற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லிக்காய் ஊறுகாய்….அத்திக்காய் பொரியல்: நன்மைகள் ஏராளம்…!!
Next post மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் சீறி பாயும் ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)…!!