ஜப்பானில் வெளிநாட்டினர் அனைவரும் போட்டோ எடுக்கப்படுவார்கள்; தீவிரவாதத்தை தடுப்பதற்காக

Read Time:1 Minute, 8 Second

ஜப்பான் நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்படும். 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வெளிநாட்டினரும் போட்டோ எடுக்கப்படுவார்கள். ஜப்பானில் வெளிநாட்டினர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜப்பான் அறிவித்து உள்ளது. தூதரக அதிகாரிகள், அரசாங்க விருந்தாளிகள், பல தலைமுறையாக வசித்து வரும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் ஆதரவு அளித்து வருவதால், தீவிரவாதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று ஜப்பானியர்கள் அஞ்சுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒரே நாளில் ஐந்தாயிரம் திருமணங்கள்: நடத்த இடமின்றி டில்லிவாசிகள் திணறல்
Next post நடிகை காவேரிக்கு மருத்துவ பரிசோதனை!!!