மிருக வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல்…!!

Read Time:2 Minute, 6 Second

article_1446792195-DSC06761வில்பத்து தேசிய வனப் பாதுகாப்பு வலயங்களினுள் மிருகங்களை வேட்டையாடிய மூவரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய செல்வி பாரதி விஜேரத்ன, நேற்று வியாழக்கிழமை (05) உத்தரவிட்டார்.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பிரதேசத்தின் முன்னாள் அரசியல்வாதியொருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . குறித்த பாதுகாப்பு வலயங்களினுள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்து மிருகங்களை வேட்டையாடி எடுத்துச்சென்று கொண்டிருந்த வேளை, 6ஆம் கட்டை பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியில் வைத்து இச்சந்தேகநபர்கள் மூவரும் வண்ணாத்திவில்லு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவ்வழியாக வந்த முச்சக்கரவண்டியொன்றை நிறுத்திச் சோதனைக்குட்படுத்திய போது அதனுள்ளிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் 12, ஒளி விளக்குகள் 8 உட்பட வேட்டையாடப்பட்ட உக்குலான் இறைச்சியுடன், உயிருடன் இருந்த ஆமையொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்த குழந்தையின் வாயில் இறந்த கரு; அதிர்ச்சித் தகவல்…!!
Next post மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமாமகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் பற்றி அறிந்துள்ளீர்களா?? இதோ அந்தக் கதை…!!