இம்ரான் கானை மனைவி விஷம் வைத்து கொள்ள முயற்சி – திடுக்கிடும் தகவல்…!!
இம்ரான்கான் ‘திடீர்’ விவாகரத்து விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, அவருடைய மனைவி ரேஹம் அவரை ‘விஷம்’ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது.
கொலை முயற்சி திட்டத்தில் இம்ரான்கான் பலியாகி விடலாம் என்ற நிலையில் ரேஹம்மை அவர் விவகாரத்து செய்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அரசியல் அதிகாரத்தை பெறும்விதமாக இம்ரான்கானுக்கு மெல்ல மெல்ல சாகும் ‘ஸ்லோ பாய்ஸன்’ விஷத்தை ரேஹம் கொடுக்க விரும்பினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் செய்தியாளர் ஆரிப் நிஜாமி கூறுகையில், இம்ரான்கானுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்று ரேஹம் திட்டமிட்டு இருந்தார் என்பதையே உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன, இதுவே அவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
“ரேஹம் நோக்கங்கள் அனைத்தும் சரியானது கிடையாது என்று உளவுத்துறை அதிகாரிகள் இம்ரான்கானுக்கு அவரது நண்பர்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இம்ரான்கானிடம் உள்ள அதிகாரத்தை பிடிப்பதற்கு, ரேஹம் விஷம் வைக்க முடியும் என்று உளவுத்துறை எச்சரிக்கையிட்டது,” என்று பாகிஸ்தானின் நியூஸ் 24 சேனலுக்கு பேட்டியளித்த ஆரிப் நிஜாமி கூறியுள்ளார்.
இதற்கிடையே விவாகரத்துக்கு முன்னதாக தம்பதியினர் இடையே, தகராறு ஏற்பட்டதாகவும், இம்ரான்கானை அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனை இம்ரான்கான் கட்சியான ‘பாகிஸ்தான் தெக்ரீக்–இ–இன்சாப்’ மறுத்துவிட்டது.
ரேஹம், இம்ரான்கானை அடிக்கவில்லை என்று ‘பாகிஸ்தான் தெக்ரீக்–இ–இன்சாப்’ கட்சி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகிஉள்ளது. “இம்ரான்கான் உடனான ரேஹத்தின் உறவானது பொய் மற்றும் ஏமாற்றத்தின் அடிப்படையிலானது.
தனது கடந்த காலத்தை பற்றி இம்ரான்கானிடம் பொய்யான தகவலையே ரேஹம் தெரிவித்து உள்ளார். கணவர் துன்புறுத்தியதாகவும் பெரும்பாலும் பொய்யே கூறிஉள்ளார்,” என்றும் நிஜாமி கூறியுள்ளார். இதற்கிடையே, சில கட்சி தலைவர்களிடம் ரேஹம் பணம் வசூலித்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான் (வயது 63). கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் ‘பாகிஸ்தான் தெக்ரீக்–இ–இன்சாப்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, நடத்தி வருகிறார்.
கடந்த 1995-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி, இங்கிலாந்தை சேர்ந்த ஜெமிமா கோல்டு சுமித்தை திருமணம் செய்தார். சுலைமான் இசா, காசிம் என்று 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு, ஜூன் மாதம் 22-ந்தேதி இவர்கள் பிரிந்து விட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர் டி.வி. பத்திரிகையாளரான ரேஹம் (42) இம்ரான் கான் என்பவரை காதலித்தார். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. இருவரும், இஸ்லாமாபாத்தில் உள்ள இம்ரான்கானின் பண்ணை இல்லத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த ரேஹமும் ஏற்கனவே இஜாஸ் ரகுமான் என்பவரை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்து கொண்டவர்.
இம்ரான்கான், ரேஹமின் பத்துமாத திருமண பந்தம் திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் கருத்தொருமித்து விவாகரத்து செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாக கடந்த மாதம் 30-ம் தேதி இம்ரான்கானின் ‘பாகிஸ்தான் தெக்ரீக்–இ–இன்சாப்’ கட்சி செய்தி தொடர்பாளர் நயீமுல் ஹக், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். விவாகரத்து முடிவினை ரேஹமும் உறுதி செய்தார்.
ரேஹம், அரசியலில் குதிக்க விரும்பியதாகவும், அதை இம்ரான்கான் விரும்பாததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இந்த நிலைக்கு காரணம் என ஒரு தகவல் கூறுகிறது. இம்ரான்கானின் குடும்பத்தினர் அவர் ரேஹமை விவாகரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தம் தந்து வந்ததாக மற்றொரு தகவல் கூறுகிறது.
Average Rating