70 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் விபத்துக்குள்ளான விமானம்: கண்டுபிடிக்கப்பட்ட வீரர்களின் எலும்புக்கூடுகள்…!!

Read Time:2 Minute, 1 Second

america_miltrybodeies_002-615x34870 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ வீரர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் ராணுவ விமானம் சி-47ல் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவில் உள்ள பெனாங்கிற்கு சென்றபோது அந்த விமானம் மலேசியாவில் மாயமானது.

இதனைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி நடைபெற்ற நிலையில், வீரர்களின் உடல்கள் கிடைக்காததால் அதில் பயணம் செய்த ஜட்ஸன் பாஸ்கட், வில்லியம் மேயர்ஸ் மற்றும் டொனால்ட் ஜோன்ஸ் ஆகியோர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 1966 ஆம் ஆண்டு மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் விமானத்தின் பாகங்கள் மற்றும் அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியும், இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு உள்ளூர்வாசிகள் விமானம் விழுந்த இடத்தை புகைப்படம் எடுத்து அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பிய பின்னர், பாகங்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் 70 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வீரர்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து வீரர்களின் உடல்கள் இராணுவ மரியாதையுடன் மலேசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீபாவளியை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள முற்பணம்…!!
Next post தானும் விஷமருந்தி மகளுக்கும் விஷத்தை அருந்த கொடுத்த தாய்…!!