தர்மபுரி அருகே ரூ.6 லட்சம் மோசடி: நர்சு சஸ்பெண்டு…!!

Read Time:2 Minute, 13 Second

97041cab-7343-4a3f-a0ab-b85c09e4ed39_S_secvpfதர்மபுரி அருகே உள்ளது சோளகொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை அங்கு பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியர் (நர்சு) தனலெட்சுமி போலியான கணக்குகளை தொடங்கி ரூ.6 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இந்த மோசடி குறித்து ஆரம்பத்தில் தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், கண்காணிக்காமல், முறையாக விசாரணை நடத்தாமல் கிராம சுகாதார செவிலியர் தனலெட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல் கிடைத்ததால் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் மோசடி உண்மை என தெரியவந்ததால் நர்சு தனலெட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்( பணியிடை நீக்கம்).

சஸ்பெண்ட செய்யப்பட்ட உத்தரவு நகலை தனலெட்சுமி வாங்க மறுத்ததால் அந்த நகலை அவரது வீட்டில் ஓட்டப்பட்டன.

இந்த சம்பவத்தில் டாக்டருக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களுடைய கவனம் இல்லாமல் இந்த மோசடி சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

எனவே டாக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபச்சார புரோக்கர் குண்டர் சட்டத்தில் கைது…!!
Next post காதலியை பதிவு திருமணம் செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர்…!!