ஞானப்பல்லால் ஆன மோதிரத்தை காதலிக்கு அணிவித்து திருமண நிச்சயதார்த்தம்…!!

Read Time:1 Minute, 54 Second

3b7fec59-5c99-4675-a0e0-b7712225c63a_S_secvpfஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த தனது காதலி கார்லீ லீப்கஸ்க்கு தன்னுடைய ஞானப்பல்லால் செய்யப்பட்ட மோதிரத்தை அணிவித்து லூகாஸ் அங்கர் என்பவர் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, மேற்கத்திய நாடுகளில் காதலிக்கும் பெண்ணை நிச்சயம் செய்வதற்காக காதலன் வாங்கித்தரும் வைரத்தின் மதிப்பு அந்தப் பெண்ணின் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் மதிப்பாக கருதப்படும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் அறிமுகமாகிய கார்லீ லீப்கஸ் மற்றும் லூகாஸ் அங்கர் உடனடியாக நண்பர்களாகிவிட்டனர். வைரத்தால் அன்பின் அளவைச் சொல்லிவிட முடியாது என ஆழமாக நம்பும் கார்லீக்கு, மிகவும் மதிப்புமிகுந்த தனது ஞானப்பல்லினால் மோதிரம் செய்து திருமணத்துக்கு ஒப்புதல் கேட்டுள்ளார் லூகாஸ்.

வழக்கமான பண்பாடுகளை உடைத்த லூகாஸின், இந்த வித்தியாசமான நடவடிக்கை மிகவும் பிடித்துப் போனதால் கார்லீயும் உடனடியாக திருமணத்துக்கு தனது சம்மதத்தை தெரிவித்துவிட்டார். பழைய பண்பாடுகளில் துளியும் ஒட்டாத இந்த ஜோடி இவ்வாண்டு இறுதியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெற்றிகரமாக 15-வது ஆண்டை நிறைவு செய்தது சர்வதேச விண்வெளி நிலையம்: அறியப்படாத 6 தகவல்கள்…!!
Next post ஓமலூர் அருகே 3 வருடங்கள் காத்திருந்து காதலியை கரம் பிடித்த வாலிபர்…!!