வெற்றிகரமாக 15-வது ஆண்டை நிறைவு செய்தது சர்வதேச விண்வெளி நிலையம்: அறியப்படாத 6 தகவல்கள்…!!

Read Time:2 Minute, 24 Second

773e8143-fe9f-4dc2-b79f-38678d696615_S_secvpfநவம்பர் 2, 2000: இந்த நாளில் தான் முதல் முதலில் பில் ஷெப்பர்ட், யூரி மற்றும் செர்ஜி ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையம் பல்வேறு நாடுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு, பூமியை சுற்றிவரும்படி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் வீரர்கள் அங்கு தங்கி உயிரியல், இயற்பியல், வானவியல், வானிலை மற்றும் பிற துறைகளில் சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

பெருமைமிக்க சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி அறியப்படாத 6 தெரியாத உண்மைகள் பின்வருமாறு:

1. இதுவரை 17 நாடுகளை சேர்ந்த 220 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் சென்று வசித்துள்ளார்கள்.

2. சர்வதேச விண்வெளி நிலையம் இதுவரை பூமியை 87,600 முறை சுற்றிவந்துள்ளது.

3. ஒன்பது நாடுகளை சேர்ந்த 122 வீரர்கள் spacewalks என்று கூறப்படும் விண்வெளி நிலையத்திற்கு வெளியேவந்து மிதந்தபடி கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

4. நீண்ட நாள் விண்வெளியில் இருப்பதால் ஏற்படும் விளைவுகளை அறிந்துக்கொள்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட் கெல்லி 522 நாட்களாக அங்கு தங்கியுள்ளார்.

5. இன்று உள்ள விண்வெளி நிலையம் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவிற்கு சமமானது. உள்பகுதியில் படுக்கை அறையுடன் கூடிய 6 வீடுகள் அளவிற்கு மனிதர்கள் வசிப்பதற்கான இடம் உள்ளது.

6. இதன் எடை 454,000 கிலோ கிராம். 3.3 மில்லியன் மென்பொருள் குறியீடு கோடுகள் மூலம் இயங்கவைக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் மலையிலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி…!!
Next post ஞானப்பல்லால் ஆன மோதிரத்தை காதலிக்கு அணிவித்து திருமண நிச்சயதார்த்தம்…!!