காய்கறிகளின் விதைகளில் இவ்வளவு நன்மைகளா?

Read Time:3 Minute, 9 Second

seeds_heath_001காய்கறிகள் எவ்வாறு நமது ஆரோக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதேபோன்று அதன் விதைகளும் ஏராளமான சத்துக்களை வழங்குகின்றன.

அந்தவகையில், சில காய்கறிகளின் விதைகள் தரும் சத்துக்கள் பற்றி பார்ப்போம்,

பூசணிக்காய் விதை

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பூசணிக்காய் விதை உகந்தது, ஏனெனில் இதில் கொலஸ்ட்ராலின் அளவு குறைவாக உள்ளது.

எலும்புகளுக்கு வலுவூட்டுகின்ற, சிறுநீரகக் கற்களை கரைக்கக்கூடிய சத்துக்களான இரும்பு மற்றும ஜிங்க் இருக்கின்றன.

மேலும் குடலில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் இருந்தால், பூசணிக்காயின் விதைகளை சாப்பிட்டால் சரியாகிவிடும்.

வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் இருந்தால், அவற்றை பூசணிக்காயின் விதைகள் சரிசெய்துவிடும்.

தக்காளி விதைகள்

சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங்(Anticloting) என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

குடைமிளகாய் விதைகள்

குடைமிளகாய் விதையில் விட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. அதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும்.
ஏனெனில் அந்த விதையில் வயதான தோற்றத்தை தடுக்கும் லைகோபைன் என்னும் பொருள் உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் இளமையோடு காட்சியளிக்கலாம்.

பப்பாளி விதைகள்

பப்பாளியின் விதைகளை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் இருக்கும் டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, செரிமானத்தை அதிகரிக்கிறது.

அதிலும் வாயுத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு ஸ்பூன் பாப்பாளியின் விதையை சாப்பிட்டால் சரியாகிவிடும். வேண்டுமென்றால் அதனை காய வைத்து, உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையில் ஆண்கள் சிறந்து நீடித்து செயல்பட பீர் எப்படி உதவுகிறது தெரியுமா…?
Next post நீதியமைச்சர் விஜயதாச யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்…!!