கேரளாவில் போரிட்டு மடிந்த இந்துவுக்கு விழா எடுத்து கவுரவிக்கும் இஸ்லாமியர்கள்..!!

Read Time:2 Minute, 22 Second

kerala_mosque_002-615x461கேரளாவில் ஒரு மசூதியில் இந்து ஒருவருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.
கேரளாவில் கடந்த 290 ஆண்டுகளுக்கு முன் கோழிக்கோடு பகுதியை ஆண்ட அரசருக்கும் மலப்புரம் பகுதியில் வசித்த இஸ்லாமியர்களுக்கும் வரி வசூல் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த அரசர், வராக்கல் பாரா நம்பி என்பவரின் கீழ், ஒரு பெரும் படையை அனுப்பி இஸ்லாமிய மக்களை துன்புறுத்தியுள்ளார்.

அரச படையை எதிர்த்து அலி மராக்கையர் என்பவர் தலைமையில் இஸ்லாமிய மக்கள் போரிட்ட போது, 43 இஸ்லாமியர்களுடன் இந்துவான கெனலுவும் வீரமரணம் அடைந்துள்ளார்.
போரில் வென்ற மன்னர் படையினர் அங்கிருந்த வாலியங்காடி ஜும்மா மசூதியை தீக்கிரையாக்கி விட்டு, மலப்புரத்தில் இருந்து இருந்து இஸ்லாமிய மக்களையும் துரத்தியுள்ளனர்.

மடிந்த கெனலுவின் உடலை அதே மசூதிக்கு சொந்தமான இடத்தில் இஸ்லாமிய மக்கள் எரித்துள்ளனர்.
பின்னர் மனம் திருந்திய வராக்கல் பாரா நம்பி, தீக்கிரையான மசூதியை மீண்டும் புணரமைத்து ஏராளமான இஸ்லாமிய மக்களையும் மீண்டும் மலப்புரத்திற்கு வந்து குடியேற ஏற்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து மலப்புரத்தில் உள்ள இந்த வாலியங்காடி ஜும்மா மசூதி முக்கிய மத அடையாளமாக விளங்குகிறது.

இந்நிலையில், சபான் மாதத்தின் போதுதங்களுக்காக போராடி, போரில் உயிரிழந்த இந்து நண்பர் கெனலுவுக்காக இந்த மசூதியில் விழா எடுக்கப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்வின் போது, கெனலுவின் பரம்பரையினர் மசூதிக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீதியமைச்சர் விஜயதாச யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்…!!
Next post விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு கடிதம்…!!